புதிய வருமான வரி மசோதாவில் என்ன ஸ்பெஷல்.. நாடாளுமன்ற தேர்வுக்குழு இன்று அறிக்கை தாக்கல்
டெல்லி: தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச்சட்டம் 1961ம் ஆண்டுகொண்டுவரப்பட்டது ஆகும். இந்த சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை மத்திய அரசு மாற்றிவந்தது. ஆனால் சட்டத்தின் அம்சங்கள் தெளிவான விளக்கத்துடன் இல்லை. இதையடுத்து தெளிவான விளக்கங்களுடன் புதிய வருமானவரி சட்டம் வரப்போகிறது. இந்த புதிய வருமானவரி மசோதா கடந்த முறை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ஆய்வு அறிக்கை இன்று நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் வருமான வரித்துறையை பற்றியும், அமலாக்கத்துறை பற்றியும் மாயத்தோற்றங்கள் அதிகமாக உள்ளது. அதற்கு காரணம் சட்ட விரோத சம்பாத்தியங்களை வருமான வரித்துறை எப்படி கையாள்கிறது, எப்படிப்பட்ட விஷயங்கள் சிக்கலாகும் என்பது பற்றி புரிதல்கள் சமானியர்களுக்கு இல்லாதது தான் காரணம். காரணம்.. வருமான வரி சட்டம், சாமானியர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இல்லை..

வருமானவரி சட்டம்
அதாவது தற்போது அமலில் உள்ள வருமானவரி சட்டம், 1961-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அது எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இல்லை என்பது கருத்தாக உள்ளது. இதையடுத்து மத்திய அரசு வருமான வரி சட்டம் என்பது எளிதாக புரியும் வகையிலான விளக்கத்துடனும், வரிசெலுத்துவோருக்கு உகந்ததாகவும் மாற்றும் வகையில், புதிய வருமானவரி மசோதாவை கடந்த பிப்ரவரி 13-ந் தேதி நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய அரசு ஆய்வு
ஆனால் வந்த வேகத்திலேயே அந்த மசோதா, நாடாளுமன்ற தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பா.ஜனதா எம்.பி. வைஜெயந்த் பாண்டா தலைமையில் 31 உறுப்பினர்களை கொண்ட தேர்வுக்குழு, வருமான வரி மசோதாவை ஆய்வு செய்து வந்தது. அக்குழு, மசோதாவில் 285 யோசனைகளை பரிந்துரைத்துள்ளது. கடந்த 16-ந் தேதி, தேர்வுக்குழு கூட்டத்தில், குழுவின் அறிக்கை நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அந்த அறிக்கை, நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
புதிய வருமான வரி சட்டம் சிறப்புகள்
தற்போதைய வருமானவரி சட்டத்தில் 5 லட்சத்து 12 ஆயிரம் வார்த்தைகள் இருந்தது. ஆனால் புதிய மசோதாவில் 2 லட்சத்து 60 ஆயிரம் வார்த்தைகள் மட்டுமே உள்ளன. அதுபோல், பிரிவுகளின் எண்ணிக்கை 819-ல் இருந்து 536 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் அத்தியாயங்களின் எண்ணிக்கை 47-ல் இருந்து 23 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. புதிய வருமான வரி மசோதாவில் 57 அட்டவணைகள் உள்ளன. 1,200 நிபந்தனைகளும், 900 விளக்கங்களும் நீக்கப்பட்டிருக்கிறது.
டிடிஎஸ் டிசிஎஸ் எப்படி
வரிவிலக்குகள், டி.டி.எஸ்., டி.சி.எஸ். தொடர்பான உட்பிரிவுகள், அட்டவணை வடிவத்தில், சாமானியர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன. எந்த ஆண்டுக்கான வருமானத்தை கணக்கிடுறோம் என்பதை 'முந்தைய ஆண்டு' என்று தற்போதைய சட்டத்தில் குறிப்பிட்டு வந்தார்கள். அது, 'வரி ஆண்டு' என்று தற்போது மாற்றப்பட்டுள்ளது. 'மதிப்பீட்டு ஆண்டு' என்ற கருத்தும் நீக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications