பெண்கள், திருநங்கைகளுக்கு சமவாய்ப்பு.. ஓடிக்கு டபுள் சம்பளம்! புதிய தொழிலாளர் சட்டம் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தொழிலாளர் உரிமைகளையும், வணிகச் சூழலையும் மேம்படுத்தும் நோக்கில், 29 தொழிலாளர் சட்டங்களை நான்கு முக்கிய சட்டத் தொகுப்புகளாக மத்திய அரசு மாற்றியிருக்கிறது. இந்த மாற்றம் நாடு முழுவதும் உள்ள 40 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களை பாதுகாக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்தியாவில்தான் இளைஞர்கள் அதிகம். மறுபுறம் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை பூதாகரமாக வெடித்திருக்கிறது. குறிப்பாக பூட்டான், மியான்மரை விட இந்தியாவில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கும் வேலைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இப்படி இருக்கையில்தான் புதிய தொழிலாளர் நலச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

job job India
  • ஊதிய குறியீடு
  • தொழில்துறை உறவுகள் குறியீடு
  • சமூகப் பாதுகாப்புக் குறியீடு
  • தொழில்சார் பாதுகாப்பு குறியீடு

புதிய சட்டங்கள் மேற்குறிப்பிட்ட முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளன. இதில் பெண்களுக்கு சமத்துவம், ஒரு வருடத்திற்குப் பிறகு நிரந்தரத் தன்மை கொண்ட ஊழியர்களுக்கு பணிக்கொடை, இலவச ஆண்டு சுகாதாரப் பரிசோதனைகள், மிகை நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் போன்ற பல முக்கிய சலுகைகள் அடங்கும். இந்த சட்டம் 4 தொகுப்புகளாக இருக்கிறது.

ஊதிய குறியீடு 2019

இதன் மூலம் தொழிலாளர் உரிமை வலுவடையும் என்று சொல்லப்படுகிறது. நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும், தையல், பூ வியாபாரம், பால் வியாபாரம், பெட்டிக்கடை, சலவை தொழில், சலூன் இப்படி எந்த நிறுவனத்தையும் சாராமல் உள்ள தொழிலாளர்கள்தான் இந்தியாவில் அதிகம். இந்த அமைப்புசாரா தொழிலாளர்களையும் உள்ளடக்கி அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம்/வருவாயை இந்த சட்டம் உறுதி செய்கிறது. முன்பு, குறைந்தபட்ச ஊதியச் சட்டம் சுமார் 30% தொழிலாளர்களை மட்டுமே உள்ளடக்கியிருந்தது. ஆனால் புதிய சட்ட தொகுப்பு மூலம் இது பெரும்பாலான தொழிலாளர்களை சென்றடையும் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல தமிழகத்தில் கூலி வேலைக்கு சம்பளம் அதிகமாகவும், ஒடிசா, பீகார் போன்ற மாநிலங்களில் சம்பளம் குறைவாகும் இருந்து வரும் நிலை இனி நீடிக்காது. அதாவது, மத்திய அரசு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்திருக்கிறது. இந்த ஊதியம் நாடு முழுவதும் ஒரே மாதிரி பின்பற்றப்படும். இதில் ஏற்றம் இருக்கலாமே தவிர, இறக்கம் இருக்காது. மேலும், வேலைவாய்ப்பு, ஊதியம், மற்றும் வேலை நிலைமைகளில் திருநங்கைகள் உட்பட பாலினம் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்பதையும் இந்த சட்டம் வலியுறுத்துகிறது.

தொழில்துறை உறவுகள் குறியீடு 2020

தொழிற்சங்கங்கள், வேலைவாய்ப்பு நிலைமைகள், மற்றும் தொழில்துறை தகராறுகளின் தீர்வு தொடர்பான சட்டங்களை எளிமைப்படுத்துவதே இதன் நோக்கம்.

தொழிற்சங்க அங்கீகாரத்தை பொறுத்த அளவில், 51% உறுப்பினர்களைக் கொண்ட தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை தொழிற்சங்கங்களாக அங்கீகரிக்கப்படும். இல்லையெனில், குறைந்தது 20% உறுப்பினர்களைக் கொண்ட தொழிற்சங்கங்களில் இருந்து ஒரு பேச்சுவார்த்தை கவுன்சில் உருவாக்கப்படும். அதேபோல வேலை நீக்கம் தொடர்பான சட்டத்திலும் மத்திய அரசு மாற்றத்தை செய்திருக்கிறது. இதற்கு முன்னர் 100க்கும் அதிகமான தொழிலாளர்களை கொண்ட நிறுவனங்கள், பணி நீக்கம் செய்யவோ, நிறுவனத்தை முழுமையாக இழுத்து மூடவோ மாநில அரசிடம் பெற வேண்டும் என்று இருந்தது.

தற்போது இந்த எண்ணிக்கை 300 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இனி 299 தொழிலாளர்களை கொண்ட நிறுவனங்கள் திடீரென கடையை சாத்திவிட்டு போனாலும் ஏன் என்று கேள்வி கேட்க முடியாது. சில இடங்களில் 300 என்கிற எண்ணிக்கையை மாநில அரசுகள் மேலும் அதிகரித்துக்கொள்ளலாம் என்று புதிய சட்டம் கூறுகிறது.

சமூகப் பாதுகாப்புக் குறியீடு 2020

இந்த சட்டம் அமைப்பு சாரா, கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் வாழ்க்கை, சுகாதாரம், மகப்பேறு, மற்றும் வருங்கால வைப்பு நிதி சலுகைகளை வழங்குகிறது. அதேபோல இந்த தொழிலாளர்களுக்கு என நிதி அமைப்பு உருக்கவும் இந்த சட்டம் வலியுறுத்துகிறது. அதாவது ஸ்விகி நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 100 கோடிக்கு டர்ன் ஓவர் செய்கிறது எனில், அதில் 1 அல்லது 2% நிதியை, அரசுக்கு கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.100 கோடி எனில், அரசுக்கு ரூ.2 கோடி வரை கொடுக்க வேண்டும். இந்த நிதியை கொண்டு இந்த தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருகிறது.

அதேபோல வீடு மற்றும் பணியிடத்திற்கு இடையிலான பயணத்தின் போது ஏற்படும் விபத்துக்கள், இனி வேலை தொடர்பான விபத்துக்களாகவே கருதப்பட்டு இழப்பீடு அல்லது காப்பீடு சலுகை வழங்கப்படும்.

தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறியீடு 2020

இந்தக் குறியீடு 13 மத்திய தொழிலாளர் சட்டங்களின் தொடர்புடைய விதிகளை ஒருங்கிணைத்து எளிமைப்படுத்தியுள்ளது. இந்த சட்டம் இனி பெண் ஊழியர்கள் நைட் ஷிப்ட் பார்க்கலாம் என்பதை அனுமதிக்கிறது. ஆனால் இதற்கு பெண் ஊழியர்களின் சம்மதம் வேண்டும். அதேபோல பணி இடத்தில் போதிய பாதுகாப்பு வேண்டும் என்பதையும் சட்டம் வலியுறுத்துகிறது.

அதேபோல வேலை நேரத்தை நீடிக்கவும் இந்த சட்டம் வலியுறுத்துகிறது. தற்போது ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என, வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஆனால் இந்த சட்டம் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என்றும் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை என்றும் மாற்றிக்கொள்ள வழி வகுக்கிறது. இதன் மூலம் கூடுதலாக வேலை பார்க்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரட்டிப்பு சம்பளம் வழங்க சட்டம் வலியுறுத்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+