பீகாரில் அடித்து தூக்கும் "இந்தியா!" பின்னாலே வரும் என்டிஏ.. பிரசாந்த் கிஷோர் நிலைமை தான் மோசம்
டெல்லி: பீகார் மாநிலத்தில் இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், அதில் இந்தியா கூட்டணிக்குச் சற்று ஆதரவு அதிகமாக இருப்பதாகப் புதிய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரசாந்த் கிஷோர் நிலைமை ரொம்பவே பரிதாபமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
243 தொகுதிகளைக் கொண்ட பீகாரில் அடுத்த வாரம் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 6 மற்றும் 11 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாகவும் கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிறது.

பீகார் தேர்தல்
பீகாரில் ஆளும் என்டிஏ கூட்டணியை விட, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்குச் சற்று முன்னிலை இருப்பதாகப் புதிய சர்வே கூறுகிறது.. VOTE VIBE என்ற அமைப்பு நடத்திய அந்த ஆய்வில் என்டிஏ கூட்டணியை விட இந்தியா கூட்டணிக்கு அதிக வாக்குகள், அதாவது சுமார் 0.3% வாக்குகள் அதிகம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேஜஸ்வி யாதவ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 34.7% ஆதரவைப் பெறும் நிலையில், ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) தலைமையிலான கூட்டணி 34.4% மக்கள் ஆதரவைப் பெறும் ஓட் வைப் தெரிவித்துள்ளது.. 0.3% தானே அதிகம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், பீகாரில் இரு கட்சிகளுக்கும் கடுமையான போட்டி நிலவும் நிலையில், இந்த 0.3% கூட யார் ஆட்சியை அமைப்பார்கள் என்பதைத் தீர்மானிக்கலாம்.
ஏன் முக்கியம்
கடந்த 2020 தேர்தலில் கூட என்டிஏ கூட்டணி 37.26% வாக்குகளைப் பெற்றிருந்தது. அப்போது எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 37.23% வாக்குகளைப் பெற்றிருந்தது. வெறும் 0.03% வாக்குகளை அதிகம் பெற்ற என்டிஏ கூட்டணி ஆட்சியை அமைத்தது. எனவே, இந்த முறையும் கூட நிச்சயம் அதே போன்ற ஒரு கடுமையான போட்டி ஏற்படலாம்.
ஓட் வைப் என்ற நிறுவனம் இந்த சர்வேயை நடத்தியுள்ளது. இது வழக்கமான சர்வேக்களை தாண்டி வாக்காளர்களின் உணர்வுகளை ஆய்வு செய்வதில் கவனம் செலுத்துகிறது. அதாவது ஒரு வாக்காளர் ஏன் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க முடிவு செய்கிறார் என்பது குறித்து ஆய்வு செய்வதே ஓட் வைப் நிறுவனத்தின் பணியாக இருக்கிறது.. இந்த நிறுவனத்தின் சர்வேயில் தான் இந்தியா கூட்டணி முன்னிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு எவ்வளவு வாக்கு
அந்த சர்வேயில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக 34.7% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். பாஜக- ஜேடியு தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு 34.4% பேர் ஆதரவளித்துள்ளனர்.. அதேநேரம் பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கும் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சூராஜ் கட்சிக்குத் தோல்வியே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறும் 12.3% பேர் மட்டுமே அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என 8.1% பேர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீதான வழக்குகள் ஆர்ஜேடி கட்சியை பாதிக்கும் என 35% பேர் கூறியுள்ளனர். அதேநேரம் லாலு மீது வழக்குகள் இருந்தாலும் அவை தேர்தலைப் பாதிக்காது என்று 28% பேர் கூறியுள்ளனர்.. 17.2% பேர் இது குறித்து எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளனர். பீகாரில் நிதிஷ் குமார் அரசு சிறப்பாகச் செயல்பட்டதாக 56.7% பேர் கூறியுள்ளனர். லாலு அரசு சிறப்பாக இருந்ததாக 16.4% பேர் தெரிவித்துள்ளனர்.
பிரசாந்த் கிஷோர் நிலைமை
பிரசாந்த் கிஷோரின் நிலைமை தான் மிக மோசமாக இருக்கிறது. அந்தக் கட்சி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இதில் பெரிய பிரச்சனை என்னவென்றால் பிரசாந்த் கிஷோரின் கட்சி சின்னமான "பள்ளிப் பை", அங்குள்ள வாக்காளர்களில் 35% பேருக்கு மட்டும் தெரிகிறது. 48.4% பேருக்கு அந்தச் சின்னம் என்னவென்று தெரியவில்லை.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications