டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தென்னிந்தியாவில் இளைஞர்கள் குறி வைக்கும்.. 2 மரபணு மாறிய கொரோனா வகைகள்.. ஆராய்ச்சியாளர்கள் வார்னிங்

Google Oneindia Tamil News

டெல்லி: மிகவும் வேகமாகப் பரவும் B.1.617 மற்றும் B.1 வகையும் தென்னிந்தியாவில் அதிகளவில் கண்டறியப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. முதல் அலையில் இளைஞர்கள் மத்தியில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. அதேநேரம் குழந்தைகளிடம் கொரோனா குறைவாகவே பரவியது.

செம பரிசு.. பாஜக தலைவர் எல்.முருகனை தோற்கடித்த.. கயல்விழி செல்வராஜூக்கு அமைச்சர் பதவி! செம பரிசு.. பாஜக தலைவர் எல்.முருகனை தோற்கடித்த.. கயல்விழி செல்வராஜூக்கு அமைச்சர் பதவி!

ஆனால், இந்த 2ஆம் அலையில் குழந்தைகள் மத்தியில் கொரோனா பரவல் அதிகமாகவே உள்ளது. இது குறித்து இந்தியாவில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேகமாகப் பரவும் கொரோனா

வேகமாகப் பரவும் கொரோனா

இந்நிலையில் தென்னிந்தியாவில் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் B.1.617 மற்றும் B.1 கொரோனா வகைகள் கண்டறியப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகை கொரோனா வேகமாகப் பரவுவதாகவும் இவை குழந்தைகள் உட்பட இளைஞர்களை எளிதில் தாக்கும் அபாயம் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்ப

உலக சுகாதார அமைப்ப

முன்னதாக கடந்த வாரம் தான், உலக சுகாதார அமைப்பு B.1.617 கொரோனா வகையைக் கவனிக்கப்பட வேண்டிய வகை என்றும் அது குறித்துக் கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. அதிலும் கூட, 'கவனிக்கப்பட வேண்டிய வகை' என்றே குறிப்பிட்டிருந்தது, 'கவலை கொள்ள வேண்டிய வகை' என குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், இந்தியாவில் கண்டறியப்படும் N440K கொரோனா வகையைப் பற்றி அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

B.1.617 வகை

B.1.617 வகை

B.1.617 என்ற கொரோனா வகை கடந்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை இந்த வகை கொரோனாவின் தாக்கம் மோசமாக இருந்தது. இருப்பினும், அதன் பின்னர் இந்த கொரோனா வகை மெல்லக் குறையத் தொடங்கியது.

ஆபத்தில் இல்லை

ஆபத்தில் இல்லை

இது குறித்து ஆந்திராவின் கொரோனா கட்டுப்பாட்டு மையத் தலைவர் கே எஸ் ஜவஹர் ரெட்டி கூறுகையில், புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள N440K கொரோனா வகை ஆபத்தானது, வேகமாகப் பரவுகிறது என்று எவ்வித ஆய்வுகளிலும் கண்டறியப்படவில்லை. அப்படி இது ஆபத்தான ஒரு வைரசாக இருந்தால் இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் உலக சுகாதார அமைப்பும் எச்சிக்கை விடுத்திருக்கும் என்றார்.

English summary
Andhra government about Corona spread among the younger age group
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X