அப்போ "பிபிசி".. இப்போ "நியூயார்க் டைம்ஸ்".. மோடி சீண்டி கடும் விமர்சனம்.. பொங்கியெழுந்த அமைச்சர்
"எந்த வல்லரசுக்கும் தலைவணங்காமல் இந்தியாவை தனிமனிதராக வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்கிறாரே என்கிற வெறுப்பு பிரதமர் மோடி மீது மேற்கத்திய ஊடகங்களுக்கு இருக்கிறது"
டெல்லி: பிபிசியின் ஆவணப்படம் உருவாக்கிய சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், அமெரிக்காவில் இருந்து வெளியாகும் 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் இந்திய அரசு மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளது.
குஜராத் கலவரத்துக்கும் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக பிபிசி கூறியதை போல, நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தற்போது காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்து விமர்சித்துள்ளது.
இந்நிலையில், இந்த விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், மோடி மீதான வெறுப்பை மேற்கத்திய ஊடகங்கள் உமிழத் தொடங்கிவிட்டதாக கூறியிருக்கிறார்.

சர்ச்சையை உருவாக்கிய பிபிசி
பிரிட்டன் ஊடகமான பிபிசி தொலைக்காட்சி அண்மையில் ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டது. இரண்டு பாகங்களாக இருக்கும் அந்த ஆவணப்படம் முழுக்க முழுக்க குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரைத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. மேலும், குஜராத் கலவரத்துக்கு அப்போதைய குஜராத் முதல்வரக இருந்த நரேந்திர மோடியே காரணம் என்பதை போல அந்த ஆவணப்படம் சித்தரித்தது. இதனால் ஆத்திரமடைந்த மத்திய அரசு இந்த ஆவணப்படத்தை தடை செய்தது. இதன் தொடர்ச்சியாக டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் ரெய்டுகளும் நடத்தப்பட்டன.

களமிறங்கிய நியூயார்க் டைம்ஸ்
இந்த சூழலில்தான், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் நேற்று முன்தினம் ஒரு கட்டுரையை பிரசுரித்துள்ளது. அந்தக் கட்டுரையின் சாராம்சம் வருமாறு: காஷ்மீர் மக்கள் மீது இந்திய ராணுவம் அதிகப்படியான அடக்குமுறைகளை செலுத்தி வருகிறது. காஷ்மீரில் உள்ள சாதாரண மக்களின் கைகளிலும் ஆயுதங்கள் திணிக்கப்படுகின்றன. ஆனால், இதுகுறித்து காஷ்மீரில் இருந்து வெளியாகும் எந்தப் பத்திரிகைகளும், ஊடகங்களும் பேசாது. ஏனென்றால், அந்த அளவுக்கு பத்திரிகை சுதந்திரம் அங்கு நசுக்கப்பட்டுள்ளது. இதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் 'காஷ்மீர் மாடல்'. இந்த காஷ்மீர் மாடலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியால், நாட்டின் பிற பகுதிகளிலும் செயல்படுத்த முடியும் பட்சத்தில், இந்தியாவில் ஜனநாயகம் என்ற ஒன்றே இருக்காது என அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கிய மத்திய அமைச்சர்
இந்நிலையில், நியூயார்க் டைம்ஸில் வெளியான இந்தக் கட்டுரை குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா பற்றி ஒரு செய்தியையோ அல்லது கட்டுரையையோ வெளியிடும் போது தனது நடுநிலை அடையாளத்தை நியூயார்க் டைம்ஸ் இறக்கி வைத்துவிடுகிறது. பல ஆண்டுகளாகவே அந்த நாளிதழ் இதைதான் செய்து கொண்டிருக்கிறது. காஷ்மீர் தொடர்பாக அந்த நாளிதழ் வெளியிட்டிருக்கும் கட்டுரை முழுக்க முழுக்க கற்பனை கலந்த கதையாகவும், எரிச்சலூட்டுவதாகவும் உள்ளது.

மோடி மீதான வெறுப்பு
சில வெளிநாட்டு ஊடகங்கள் இந்தியா மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் அளவுகடந்த வெறுப்பில் இருக்கின்றன. எந்த வல்லரசுக்கும் தலைவணங்காமல் இந்தியாவை தனிமனிதராக வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்கிறாரே என்கிற வெறுப்பு அவற்றுக்கு இருக்கிறது. இதனால் இந்திய ஜனநாயகம் குறித்தும், நமது சமூக நல்லிணக்கம் குறித்தும் அவை பொய்களை பரப்பி வருகின்றன. அப்படிதான் இந்தக் கட்டுரையையும் நாம் பார்க்க வேண்டும். இந்தியா முழுவதும் பத்திரிகை சுதந்திரம் என்பது தனிமனித அடிப்படை உரிமையை போல பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே, முழுவதும் பொய்களால் ஜோடிக்கப்பட்ட நியூயார்க் டைம்ஸ் கட்டுரைக்கு இந்தியா சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கத்திய நாடுகளின் கொள்கையை இந்திய மண்ணில் செயல்படுத்த நாங்கள் இடம்கொடுக்க மாட்டோம். இவ்வாறு அனுதராக் தாக்குர் தெரிவித்தார்.
-
மோடியை கொல்ல சதி.. அலறிய அமெரிக்க CIA.. உடனே இந்தியாவுக்கு பறந்த மெசேஜ்.. 3 பேர் அதிரடியாக கைது -
டிரம்ப் அடங்கவே மாட்டார் போல.. "இதுவரை கண்டிராத தாக்குதல் இருக்கு!" ஈரானுக்கு புதிய எச்சரிக்கை -
அமெரிக்காவின் ரகசிய ஆயுதம்.. இது தெரியாம விளையாட கூடாது! -
மீண்டும் வெடிக்கும் போர்? ஹார்முஸ் அருகே அமெரிக்காவின் ₹1,600 கோடி ட்ரோன் மாயம்.! உச்சக்கட்ட பதற்றம் -
பறந்த 26 போன் கால்கள்.. பாகிஸ்தான் வெறும் 'முகமூடி' தான்.. அமெரிக்கா- ஈரான் போரில் சீனா ஆடிய கேம் -
லெபனானில் அமைதி திரும்பும் வரை பேச்சுவார்த்தை கிடையாது.. டிரம்பை சாய்த்த ஈரான்.. மிரண்ட பாகிஸ்தான் -
ரொம்ப வீக்கான பொசிஷனில் அமெரிக்கா.. மிஸ்டர் டிரம்ப் இதையும் கொஞ்சம் பாருங்க! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின்












Click it and Unblock the Notifications