Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: என்ஏஐ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை நடத்திய சிறப்பு நடவடிக்கையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த ஆறு பேர் மற்றும் ஒரு அமெரிக்கர் உட்பட ஏழு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகத் தீவிரவாத செயல்களில் ஈடுபடச் சதி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 1995ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் உள்ள புருலியா மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் மீது ஆயுதங்களை விட்டுச் சென்றது. இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் மர்மமான பாதுகாப்பு மீறல்களில் ஒன்றாக இது இருக்கிறது. லாட்வியாவைச் சேர்ந்த அன்டோனோவ் ஆன்-26 ரக விமானம் ஒன்று, ஏகே47 உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களை வீசி சென்றது. இதற்கிடையே சுமார் 31 ஆண்டுகளுக்குப் பிறகு வடகிழக்கு இந்தியாவில் மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.

NIA Arrests total of 7 foreign nationals Drone Supply to Northeast Insurgents via Mizoram-Myanmar

குற்றச்சாட்டு

இது தொடர்பாக உக்ரைன் நாட்டை சேர்ந்த ஆறு பேர் மற்றும் ஒரு அமெரிக்கர் உட்பட ஏழு பேரை என்ஏஐ கைது செய்துள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகத் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடச் சதி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக நுழைதல், அனுமதிச் சீட்டு இல்லாமல் மியான்மருக்குள் செல்வது, இனவாத ஆயுதக் குழுக்களுக்குப் பயிற்சி அளிப்பதுடன், ஐரோப்பாவிலிருந்து பயங்கரவாதக் குழுக்களுக்கு டிரோன் விநியோகத்தை எளிதாக்குவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

ஏழு பேர்

கடந்த வெள்ளிக்கிழமை மூன்று விமான நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த ஏழு வெளிநாட்டினரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். அமெரிக்கக் குடியுரிமை கொண்டவர் கொல்கத்தா விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரியால் கைது செய்யப்பட்டார். உக்ரைனியர்களில் மூவர் லக்னோ விமான நிலையத்திலும், மற்ற மூவர் டெல்லி விமான நிலையத்திலும் பிடிபட்டனர். அனைவரும் டெல்லிக்குக் கொண்டுவரப்பட்டு சனிக்கிழமை ஒரு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட் அவர்களை மூன்று நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர், திங்கட்கிழமை, அவர்களின் காவல் மார்ச் 27 வரை, அதாவது மேலும் 11 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

என்ஐஏ நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணங்களின்படி, அமெரிக்கக் குடியுரிமை கொண்டவர் மேத்யூ ஆரான் வான் டைக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உக்ரைனியர்கள் ஹுர்பா பெட்ரோ, ஸ்லிவியாக் தாராஸ், இவான் சுக்மனோவ்ஸ்கி, ஸ்டெஃபான்கிவ் மாரியன், ஹோன்சருக் மாக்சிம் மற்றும் கமின்ஸ்கி விக்டர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த ஏழு பேரும் உபா மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

என்.ஐ.ஏ. சொல்வது என்ன

என்.ஐ.ஏ. தனது முதல் தகவல் அறிக்கையில் , "கைது செய்யப்பட்ட ஆறு உக்ரைனியர்கள், சுற்றுலா விசாக்களில் வந்தவர்கள். அவர்கள் பல்வேறு தேதிகளில் இந்தியாவுக்குள் நுழைந்த 14 உக்ரைனியர்கள் கொண்ட குழுவில் ஒரு பகுதியினர். அவர்கள் கவுகாத்திக்கு விமானத்தில் வந்துள்ளனர். கவுகாத்தியிலிருந்து அனுமதிச் சீட்டு இல்லாமல் மிசோரம் சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட அமெரிக்கர் இந்தக் குழுவுடன் எப்போது இணைந்தார் என்பது சரியாகத் தெரியவில்லை.

இந்தக் குழு மியான்மரை தளமாகக் கொண்ட EAG எனப்படும் ஆயுதக் குழுக்களுக்குத் திட்டமிடப்பட்ட பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் சட்டவிரோதமாக மியான்மருக்குள் நுழைந்தது. இந்த ஆயுத குழுக்கள் டிரோன் போர் முறை, டிரோன் செயல்பாடுகள், அசெம்ப்ளி மற்றும் ஜாமிங் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியாவின் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்தும், மியான்மர் ராணுவத்தைக் குறிவைத்தும் வருகின்றன" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரோன்கள்

குற்றஞ்சாட்டப்பட்ட வெளிநாட்டவர் மூலம் ஐரோப்பாவில் இருந்து பல டிரோன்கள் மிசோரமில் உள்ள தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு வழங்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள், AK47 துப்பாக்கிகளுடன் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளுடன் நேரடித் தொடர்பில் இருப்பதையும், அவர்களைப் பயங்கரவாத சட்டவிரோத நடவடிக்கைகளைத் தூண்டியதையும் என்ஏஐ அதிகாரிகளிடம் ஒப்புக் கொண்டதாகவும் நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி

குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்தபோது, தேவையான ஆவணங்கள் இன்றி மிசோரம் பயணம் செய்ததும், சட்டவிரோதமாக மியான்மருக்குள் நுழைந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட முறை EAGகளுக்குப் பயிற்சி அளித்ததோடு, ஐரோப்பாவிலிருந்து இந்தியா வழியாக மியான்மருக்கு EAGகள் பயன்பாட்டிற்காக டிரோன் கப்பல்களைச் சட்டவிரோதமாக இறக்குமதி செய்துள்ளனர் என்றும் என்.ஐ.ஏ. கூறியுள்ளது.

இந்த குழுக்கள், சில தடைசெய்யப்பட்ட இந்தியப் பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆயுதங்கள் மற்றும் பிற பயங்கரவாத உபகரணங்களை வழங்குவதன் மூலமும், அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலமும் ஆதரவளிப்பதாக என்.ஐ.ஏ. குறிப்பிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+