3D மேப்பிங்.. பஹல்காம் தாக்குதல் மர்மத்தை கண்டறிய புது டெக்னாலஜியை கையில் எடுத்த என்.ஐ.ஏ! என்ன அது?
டெல்லி: பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை கண்டறிய 3டி மேப்பிங் தொழில்நுட்பம் மூலம் துப்பறியும் பணியை என்ஐ.ஏ அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இந்த 3D மேப்பிங் டெக்னாலஜி எப்படி வேலை செய்யும்?
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியான சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் தொடர்பான விசாரணையில் தாக்குதல் நடத்திய 3 பேரின் மாதிரி வரைபடங்கள் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அந்த மூவரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது.

பஹல்காம் தாக்குதல் - என்.ஐ.ஏ விசாரணை
அதன் பின்பு அவ்வப்போது தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்ட பைசரன் சுற்றுலா தளத்தில் இருந்து ஜிப்லைனில் பயணிக்கும் ஒருவரின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கு விசாரணையை என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமையிடம் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது.
இந்த வழக்கு குறித்து முக்கிய ஆவணங்கள், எப்.ஐ.ஆர் நகல் ஆகியவற்றை என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஜம்மு காஷ்மீர் போலீசார் ஒப்படைத்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணை நடத்தி வருகிறது. தாக்குதல் நடந்த இடத்தில் ஆதாரங்களை தேடும் பணியில் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
3D மேப்பிங்
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை கண்டறிய தேசிய புலனாய்வு முகமை தனது விசாரணையில் தற்போது 3D மேப்பிங் தொழில்நுட்ப முறையை கையாண்டு வருகிறது. தாக்குதலின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் அங்கிருந்து உயிர் தப்பியவர்களின் கூறிய சாட்சியை கொண்டு 3D முறையில் நடந்த சம்பவத்தை மீள் உருவாக்கம் செய்து விசாரித்து வருகின்றனர்.
தொழில்நுட்பத்தை மனித பகுப்பாய்வோடு இணைப்பதன் மூலம், என்.ஐ.ஏ உயர் தெளிவுத்திறன் கொண்ட 3D மாடலை உருவாக்குகிறது. இந்த செயல்முறை LiDAR, ட்ரோன் கண்காணிப்பு மற்றும் புகைப்பட வரைபடத்தைப் பயன்படுத்தி அந்த லொக்கேஷனின் விரிவான மற்றும் துல்லியமான காட்சிகளை உருவாக்குகிறது.
3D மேப்பிங் என்றால் என்ன?
இந்த தொழில்நுட்பம் ஒரு பொருள் அல்லது பகுதியின் முப்பரிமாண வரைபடத்தை உருவாக்குகிறது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சாட்சிகள் கூறிய அடிப்படையில், அந்த இடத்தின் 3D வரைபடத்திற்காக என்.ஐ.ஏ அதிகாரிகள் புதன்கிழமை அன்று பைசரன் புல்வெளியில் மீண்டும் ஆய்வில் ஈடுபட்டனர். தொழில்நுட்பத்தையும் மனிதர்களின் இன்புட்டையும் இணைத்து, NIA அந்த இடத்தின் உயர் தெளிவுத்திறன் கொண்ட 3D மாதிரியை உருவாக்குகிறது.
தாக்குதலுடன் இணைக்கப்பட்ட ஒவ்வொரு அசைவையும் புல்லட் பாதையையும் கண்காணிக்க இந்த 3D வரைபடம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, செயற்கைக்கோள் படங்கள், ட்ரோன்கள் மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஆகியவற்றை என்.ஐ.ஏ அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
நேரடி சாட்சிகள்
மேலும், பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், குதிரை ஓட்டிகள், கடைக்காரர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் அருகில் பணிபுரியும் மற்றவர்களிடமிருந்து தகவல்களை பெற்று வருகின்றனர். பஹல்காம் தாக்குதல் நடந்த காட்சியின் டிஜிட்டல் பதிப்பை மீண்டும் உருவாக்க இவை அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன.
துல்லியமாக புரிந்துகொள்ள முடியும்
இந்த மேப்பிங் செயல்முறை LiDAR, ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் புகைப்பட வரைபடவியல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இவை சம்பவ இடத்தின் துல்லியமான 3D காட்சிகளை உருவாக்க உதவுகின்றன. இதன் மூலம் புலனாய்வாளர்கள் தாக்குதலை நன்கு புரிந்துகொள்ளவும், தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் தெளிவாக முன்வைக்கவும் முடியும்.
"3D மேப்பிங் தாக்குதல் நடந்த இடத்தின் துல்லியமான, கிராஃபிக்ஸ் நிறைந்த காட்சிப்படுத்தலை வழங்கும். இதன் மூலம் நூற்றுக்கணக்கான மக்களை அந்த இடத்திற்கு அழைத்து வராமலேயே விசாரிக்கலாம். மேலும் அன்று அங்கு இருந்த அனைவரின் சரியான இடம், பயங்கரவாதிகளின் நுழைவு மற்றும் வெளியேறும் புள்ளிகள் மற்றும் கொலைகள் நடந்த பகுதிஆகியவற்றைப் புரிந்துகொள்ள முடியும்" என்று ஒரு அதிகாரி கூறியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆர்ஜி கர் பாலியல் வன்கொடுமை வழக்கில்
2019 புல்வாமா தாக்குதலின் போது, 3D மேப்பிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு, மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை பாலியல் வன்கொடுமை வழக்கில், முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராயின் நடவடிக்கைகளைக் கண்டறிய 3டி மேப்பிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications