அடேங்கப்பா.. அடிச்சு தூக்கிய இந்திய பங்கு சந்தை! மிரண்ட சர்வதேச நாடுகள்!
டெல்லி: இந்த வாரம் பங்கு சந்தை நிஃப்டி 50 குறியீட்டில் 1000 புள்ளிகள் உயர்ந்து, 25,000 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பின்னர் இந்த உச்சத்தை இந்திய பங்கு சந்தை தற்போது எட்டியிருக்கிறது.
இந்த உயர்வுக்கு காரணம் முதலீட்டாளர்கள்களின் நம்பிக்கைதான். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இந்தியா மீதான மதிப்பை சர்வதேச அளவில் உயர்த்தியிருக்கிறது. இது பங்கு சந்தையிலும் எதிரொலித்திருக்கிறது.

பாகிஸ்தானுடன் சண்டைக்கு போனால் சர்வதேச அளவில் நெருக்கடிகள் ஏற்படும் என்றும், வர்த்தகத்தில் இந்த நெருடிக்கள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் நெகட்டிவான எச்சரிக்கைகைள் வந்திருந்தன. ஆனால் ஆபரேஷன் சிந்தூர் இதையெல்லாம் தூக்கி சாப்பிட்டிருக்கிறது. நேற்று சந்தை முடிவில் பிஎஸ்இ மிட்கேப்/ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 6.9%/9.2% அதிகரித்து சந்தையை உயர்த்தின.
"தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்த உயர்வு வரும் வாரத்திலும் நீடிக்கும். குறுகிய காலத்தில் நிஃப்டி 25,300 ஐ நோக்கி நகரும். எங்கள் எதிர்ப்பார்ப்பை தாண்டி, 25,600 ஐ நோக்கி கூட மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல், 24,700-24,750 என்கிற அளவில் பங்குகள் சரிந்தாலும் நாம் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் வர்த்தகம் மீண்டும் பவுன்ஸ்பேக் ஆகும்" என்று எஸ்பிஐ செக்யூரிட்டீஸ் கூறியிருக்கிறது.
அதேபோல இந்த வாரத்தில் கவனிக்கக்கூடிய வேறு சில விஷயங்களும் இருக்கின்றன. டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் போன்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அரையாண்டு/காலாண்டு வருவாய் அறிக்கைகளை வெளியிடும். இந்நிறுவனங்களின் வருவாய் எதிர்பார்ப்பை விட குறைவாக இருந்தால் அந்த நிறுவனத்தின் பங்கு விலை வீழ்ச்சியடையும். நல்ல வருவாய் இருந்தால் பங்கு விலை ஏற்றம் காணும். இந்நிறுவனங்கள் மிகப்பெரியவை என்பதால் இதன் சரிவு, மொத்த பங்கு சந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தம். இதன் வளர்ச்சியும் பாசிட்டிவ் மாற்றத்தை ஏற்படுத்தும்.
அதேபோல இந்தியாவும், அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் இந்திய பங்குச்சந்தை வளர்ச்சியடையும். தோல்வியில் முடிந்தால், சற்று வீழ்ச்சியடையும். அதேபோல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தற்போது இந்திய பங்கு சந்தையில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த முதலீடுகள் மேலும் தொடர்ந்தால் சந்தையில் வளர்ச்சி இருக்கும்.
பங்கு சந்தையில் வளர்ச்சி ஏற்படுகிறது எனில் முதலீடுகள் அதிகரிக்கிறது என்று அர்த்தம். முதலீடுகள் புதிய வேலை வாய்ப்புகளையும், பொருளாதார சூழலையும் உருவாக்கும். இது நல்ல விஷயம்தான்.
-
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications