"என்னை விடுங்க" செருப்பால் அடித்து கொண்டு.. தற்கொலைக்கு முயன்ற புனிதா.. கோர்ட் வளாகத்தில் பரபரப்பு

குற்றவாளி அக்‌ஷய் மனைவி புனிதா திடீர் மயக்கமடைந்தார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கணவனுக்கு தூக்கு உறுதி என்று கோர்ட் சொன்னதுமே அப்படியே மயங்கி விழுந்துவிட்டார் குற்றவாளி அக்‌ஷய் மனைவி புனிதா.. பிறகு திடீரென செருப்பை கழட்டி தன்னை தானே அடித்து கொள்ள ஆரம்பித்தார்.. "நான் வாழ விரும்பவில்லை, நான் சாகணும்.. " என்று கதறினார்.. புனிதா மயங்கி விழுந்ததும், தற்கொலைக்கும் முயன்ற சம்பவம் கோர்ட் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

நாளைய தினம் 20-ம் தேதி நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படஉள்ளது... இந்த 4 பேருமே தங்கள் தண்டனையை நிறுத்தவும், தாமதப்படுத்தவும் பலவகையில் வக்கீலுடன் போராடி வந்தனர்.. கடைசி நம்பிக்கையாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைய நீதிமன்றத்தை நாடினர்.

நிர்பயா பலாத்காரம்-கொலை வழக்கில், கடைசி சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.. இதனால் நாளை காலை 5.30 மணிக்கு 4 பேரும் தூக்கிலிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

தண்டனை

தண்டனை

இந்த வழக்கை பொறுத்தவரை எல்லாவித சட்ட நடைமுறைகளும் முடிந்து விட்டன... 3 முறை தண்டனை தள்ளிபோடப்பட்டே வந்தது.. அதனால் இனியும் இவர்களின் தூக்கு தண்டனையை தள்ளிப்போட வாய்ப்பே இல்லை என்பதுதான் சட்ட நிலை.. இதனிடையே அக்‌ஷய் குமார் சிங் மனைவி புனிதா பீகார் மாநிலம் அவுரங்காபாத் உள்ளூர் கோர்ட்டில் நேற்று மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.

மனு

மனு

அதில், கணவன் சாவுக்கு பிறகு தான் விதவை என்ற பெயருடன் இந்த சமூகத்தில் வாழ விரும்பவில்லை.. அதனால் தூக்குத் தண்டனை தரப்படுவதற்கு முன்பேயே கணவரிடமிருந்து தனக்கு விவாகரத்து வாங்கி தந்துவிடுமாறு கேட்டுக் கொண்டார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட கோர்ட் இதுகுறித்து இன்றைய தினம் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்திருந்தது.

சுயநினைவு

சுயநினைவு

இந்நிலையில் டெல்லி, பாட்டியாலா நீதிமன்ற வளாகத்துக்கு புனிதா இன்று மதியம் வந்திருந்தார்.. சீராய்வு மனு தள்ளுபடி என்பதை கேட்டதுமே அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.. இதை பார்த்து பதறிய அருகில் இருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து உதவி செய்தனர்.. சிறிது நேரம் கழித்து சுயநினைவுக்கு திரும்பிய புனிதா அழுதபடியே இருந்தார்.

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

திடீரென செருப்பை கழட்டி தன்னை தானே அடித்து கொள்ள ஆரம்பித்தார்.. "நான் வாழ விரும்பவில்லை, நான் சாகணும்" என்றாள்... இதையெல்லாம் பக்கத்தில் இருந்தபடியே அவரது குழந்தை மிரண்டு பார்த்து கொண்டிருந்தது.. புனிதா மயங்கி விழுந்ததும், தற்கொலைக்கும் முயன்ற சம்பவம் கோர்ட் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

நாளை தூக்கு?

நாளை தூக்கு?

நாளை காலை விடிகாலை 4 பேருக்கும் தூக்கு என்ற நிலையில் நேற்றுகூட சிறை வளாகத்தில் அதற்கான ஒத்திகையும் நடத்தப்பட்டது.. கணவன் கழுத்தில் தூக்கு கயிறு ஏறிடாமல் இருக்கவும், தன் கழுத்தில் இருக்கும் தாலி கயிறை காப்பாற்றி கொள்ளவும் எப்படி எப்படியோ முயற்சி செய்தும் தோற்று கொண்டே வருகிறார் புனிதா.. இதன் இறுதி முடிவு நாளை தெரிந்துவிடும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+