நெருப்போடு விளையாடுறீங்க.. நிர்பயா குற்றவாளிகளின் வழக்கறிஞருக்கு டெல்லி நீதிமன்றம் எச்சரிக்கை
டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க டெல்லி நீதிமன்றம் மறுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மிகமோசமான.பாலியல் வன்கொடுமை கொலையில் ஈடுபட்ட நான்கு பேருக்கு நாளை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம் தற்போது தண்டனையை நிறைவேற்ற தடை விதித்துள்ளது.
டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா கடந்த 2012ம் ஆண்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (33) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களை நாளை அதாவது மார்ச் 3ம் தேதி டெல்லி திகார் சிறையில் தூக்கிலட வேண்டும் என்று கடந்த 17ம் தேதி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் இதுவரை முகேஷ் குமார் சிங், வினய் குமார் சர்மா மற்றும் அக்ஷய் குமார் ஆகிய மூன்று குற்றவாளிகளின் கருணை மனுக்கள் ஏற்கனவே ஜனாதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதில அக்சய் குமார் மனு கடந்த சரியாக தாக்கல் செய்யாத காரணத்தால் இரண்டாவது முறையாக கருணை மனு அனுப்பி இருந்தார்.
இதேபோல் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி ,குற்றவாளி பவன் குப்தா உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதே மனுவில் மார்ச் 3 ம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என டெல்லி நீதிமன்றம் விதித்த உத்தரவு தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறிருந்தார். ஆனால் இரு கோரிக்கைகளைம் உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
இதையடுத்து பவன் குப்தா குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். இந்நிலையில் கருணை மனு அனுப்பி உள்ளதை சுட்டிக்காட்டி, நாளை தனக்கு மரண தண்டனை நிறைவேற்றக்கூடாது என டெல்லி பாட்டியலா நீதிமன்றத்தில் பவன் குப்தா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், நிர்பயா குற்றவாளிகளின் வழக்கறிஞரை நெருப்போடு விளையாடுகிறீர்கள், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாராலும் ஒரு தவறான நடவடிக்கையில் இறங்கினால், அதன் விளைவுகள் என்ன என்று உங்களுக்குத் தெரியும் என்றார். இதனிடையே பவன் குப்தா கருணை மனு தாக்கல் செய்த சில மணிநேரத்தில் அவரது மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications