"என்னால விதவையா வாழ முடியாது" நிர்பயா கொடூரன் அக்ஷய் குமார் மனைவி புனிதா எடுத்த அதிரடி முடிவு!
நிர்பயா குற்றவாளி மனைவி கோர்ட்டில் புது மனு தாக்கல் செய்துள்ளார்
டெல்லி: "என்னால விதவையா வாழ முடியாது.. அதனால என் கணவருக்கு தூக்கு தண்டனை தருவதற்கு முன்னாடியே எனக்கு அவர்கிட்ட டைவர்ஸ் வாங்கி தந்துடுங்க" என்று நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார் சிங் மனைவி புனிதா மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
நாளை மறுநாள் அதாவது 20-ம் தேதி நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படஉள்ளது... இந்த 4 பேருமே தங்கள் தண்டனையை நிறுத்தவும், தாமதப்படுத்தவும் பலவகையில் வக்கீலுடன் போராடி வந்தனர்.. கடைசியாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைய நீதிமன்றத்தை நாடியுள்ளனர்... இதுதான் இவர்களின் கடைசி நம்பிக்கையாக உள்ளது.

ஆனால் இந்த வழக்கை பொறுத்தவரை எல்லாவித சட்ட நடைமுறைகளும் முடிந்து விட்டன... அதனால் இனி தண்டனையை தள்ளிப்போட வாய்ப்பே இல்லை என்கிறார்கள். இந்நிலையில் அக்ஷய் குமார் சிங் மனைவி புனிதா பிகார் மாநிலம் அவுரங்காபாத் உள்ளூர் கோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
அதில், கணவன் சாவுக்கு பிறகு தான் விதவை என்ற பெயருடன் இந்த சமூகத்தில் வாழ விரும்பவில்லை.. அதனால் தூக்குத் தண்டனை தரப்படுவதற்கு முன்பேயே கணவரிடமிருந்து தனக்கு விவாகரத்து வாங்கி தந்துவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட கோர்ட் இதுகுறித்து நாளைய தினம் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
இந்த மனு குறித்து புனிதாவின் வக்கீல் சொல்லும்போது, "அக்ஷய் குமாரிடமிருந்து விவாகரத்து பெற அவரின் மனைவிக்கு உரிமை உண்டு. அதன் அடிப்படையில்தான் குடும்ப நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். கணவர் மீது பலாத்காரம், மனித விரோத கொலை குற்றச்சாட்டுகள் இருப்பதால் மனைவி விவாகரத்து பெற உரிமையுள்ளது" என்றார்.
இந்த வழக்கில் புனிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் அக்ஷய் குமார் கழுத்தில் தூக்குக் கயிறு இறங்குவதற்குள் புனிதாவின் கழுத்திலிருந்து அவர் கட்டிய தாலி இறங்கியிருக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications