“இலங்கை, பாகிஸ்தானைவிட இந்தியா பரவாயில்ல” ரகுராம் ராஜனே சொல்கிறார் - லோக்சபாவில் நிர்மலா சீதாராமன்
டெல்லி: இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாகவும், ஒருங்கிணைந்து செயல்பட்டதால் பொருளாதார வளர்ச்சி மீண்டு இருப்பதாகவும் மக்களவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
Recommended Video
நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று மாலை 7 மணியளவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், லோக்சபாவில் விலை உயர்வு குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், "மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் எடுத்து நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

விலைவாசி உயர்வு
உலகளவில் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து இருந்த நேரத்தில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பெரும்பாலான நாடுகளை காட்டிலும் இந்தியாவில் பொருளாதாரம் வலுவான நிலையில் இருக்கிறது. பல உறுப்பினர்களின் பேச்சுக்கள் விலைவாசி உயர்வு குறித்த கவலையை வெளிப்படுத்தாமல், அரசியல் கோணத்தில் இருந்ததை கண்டேன். எனவே நானும் கொஞ்சம் அரசியல் ரீதியாகவே விளக்கமளிக்கிறேன்.

கொரோனா
இதுபோன்ற பெருந்தொற்றை நாம் இதுவரை எதிர்கொண்டது கிடையாது. நமது தொகுதிகளுக்கு உட்பட்ட மக்களுக்கு தேவையான கூடுதல் உதவிகள் கிடைப்பதை உறுதிபடுத்திக்கொண்டோம். அனைத்து எம்பிக்களும், மாநில அரசுகளும் தங்கள் பணிகளை செய்தார்கள். அவர்களின் பங்களிப்பு இல்லாவிட்டால் இந்தியா மற்ற நாடுகளை காட்டிலும் இதிலிருந்து மீண்டிருக்க முடியாது.

பணவீக்கம்
எனவே இந்திய மக்களுக்கே இதன் பெருமைகள் அனைத்தும் போய்சேரும். கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை, ஓமைக்ரான், உக்ரைன் - ரஷியா போர், சீனாவில் ஊரடங்கால் உதிரிபாகங்கள் வரத்து தடைப்பட்ட சூழலிலும் பணவீக்கம் 7% க்கும் குறைவாகவே உள்ளது. இன்று காலை ஜுலை மாதம் வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விபரத்தை வெளியிட்டோம். ரூ.1.49 லட்சம் கோடி வரி வசூலிக்கப்பட்டு இருக்கிறது.

இலங்கை, பாகிஸ்தான்
தொடர்ந்து 5 மாதங்களாக ரூ.1.4 லட்சம் கோடிக்கு அதிகமாக ஜி.எஸ்.டி. வரி வசூலாகி வருகிறது. ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இது வரை வசூலானதில் இதுவே 2 வது அதிகபட்ச தொகையாகும். ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும் பாராட்டி இருக்கிறார். சீனா, பாகிஸ்தானைவிட இந்தியாவின் கடன் குறைவாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்." என்றார்.












Click it and Unblock the Notifications