தேர்தல் பத்திரங்களுக்கும்.. ரெய்டுகளுக்கும் சம்பந்தம் கிடையாதுங்க! நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் பத்திர விவரங்கள் வெளியாகி இருப்பது பாஜக மீதான விமர்சனங்களை அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கும், தேர்தல் பத்திரங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது நிறுவனங்கள் ரொக்கமாகவோ, காசோலையாகவோ நன்கொடை கொடுப்பதற்கு பதிலாக, தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை மத்திய பாஜக அரசு கடந்த 2018ம் ஆண்டு அமல்படுத்தியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், தேர்தல் பத்திரங்களை ரத்து செய்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.

மட்டுமல்லாது தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை, இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து மார்ச் 14ம் தேதி மாலை இந்திய தேர்தல் ஆணையம், எஸ்பிஐ வங்கி வழங்கிய விவரங்களை வெளியிட்டது. இதில் நிறுவனங்கள் வாங்கிய நன்கொடை பத்திரங்களும், கட்சிகள் நன்கொடை பத்திரங்களை பணமாக மாற்றிய விவரங்களும் இடம்பெற்றிருந்தன.
அதன்படி, கடந்த 2022ம் ஆண்டு அமலாக்கத்துறையின் விசாரணைக்கு உள்ளன, ஃப்யூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் (லாட்டரி மார்ட்டின்) என்ற நிறுவனம் அதிகபட்சமாக தனது இரு நிறுவனங்களின் பெயரில் ரூ.1,350 கோடி மதிப்புடைய தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. அதேபோல ஹைதராபாத்தை சேர்ந்த மெகா என்ஜினீயரிங் ரூ.966 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
மேலும் மும்பையைச் சேர்ந்த க்விக் சப்ளை செயின் நிறுவனம் ரூ.410 கோடி, அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனம் ரூ.398 கோடி, சுனில் மிட்டலின் மூன்று நிறுவனங்கள் இணைந்து ரூ.246 கோடி, லக்ஷ்மி நிவாஸ் மிட்டல் ரூ.35 கோடி தேர்தல் பத்திரங்களை வாங்கியிருந்தன.
ஆனால், இப்படி வாங்கிய நிறுவனங்கள் எந்த கட்சிக்கு எவ்வளவு கொடுத்தன? என்கிற விவரங்கள் வெளியாகவில்லை. இதனை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதேநேரம், பாஜக மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி நன்கொடைகளை பெற்றுள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
குறிப்பாக 'குயிக் சப்ளை செயின்' நிறுவனத்தை எதிர்க்கட்சிகள் மேற்கோள் காட்டியுள்ளன. இந்நிறுவனம், மும்பையிலிருந்து இயங்கி வருகிறது. கடந்த 2021-2022ம் ஆண்டில் இது ரூ.21.72 கோடி லாபம் ஈட்டியுள்ளது. ஆனால், அதே ஆண்டில், ரூ.360 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியிருக்கிறது. இது எப்படி சாத்தியம்?
அதேபோல 'பியூட்சர் கேமிங்க் அண்ட் ஹோட்டல் சர்வீஸ்' நிறுவனத்தின் மீது ரெய்டு நடத்தி, கடந்த 2022ம் ஏப்ரல் மாதம் 02ம் தேதி ரூ.409.92 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. ஆனால், அதே மாதம் 7ம் தேதி இந்த நிறுவனம் தேர்தல் பத்திரங்களை வாங்கியிருக்கிறது. இப்படி சில நிறுவனங்களில் ரெய்டு நடத்தப்பட்டு, சொத்துக்கள் முடக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்ட சில நாட்களுக்குள் அந்நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கியிருக்கின்றன.
எனவே ரெய்டுகள் ஏவி தங்களுக்கான நன்கொடையை பாஜக வசூலித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் சரமாரியான விமர்சனங்களை முன்வைத்துள்ளன. இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதாவது “அமலாக்கத்துறை விசாரணைகளுக்கும், தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க. பெற்ற நிதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தனியார் நிறுவனங்கள் நிதி வழங்குவதற்குத் தயாராக இருக்கும்போது, அதற்கேற்ற சட்டங்கள் உருவாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
-
அப்செட்டில் ஸ்டாலின்.. ராகுல் பிரசாரத்திற்கு வராததால் காங்கிரஸின் 28 தொகுதிகளிலும் சிக்கல்.. பின்னணி -
விட்டமின் எம் வரலையே.. பதறும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்.. தமிழக தேர்தலில்.. பெரிய ட்விஸ்ட்! -
விஜயால் வந்த ரெட் சிக்னல்.. ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. உடனே பறந்த மேஜர் உத்தரவு! -
4 மணி நேர ‘உறக்கம்’.. பொறுப்பாளர்களை போனில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் ஸ்டாலின்! அறிவாலய அலர்ட்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி?












Click it and Unblock the Notifications