“பதிலை கேட்டுக்கிட்டு போய்.. அங்க சொல்லுங்க”! திருச்சி சிவா மீது சீறிய நிர்மலா சீதாராமன்
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், திமுக எம்பி சிவாவுக்கும் இடையே மோதல் வெடித்தால் மாநிலங்களவையில் சலசலப்பு ஏற்பட்டிருந்தது. திமுக எம்பிக்களுக்கு நிர்மலா, தமிழில் காட்டமாக பதிலளித்திருந்தது கவனம் பெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு என்ன செய்தது? என்று திமுக எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் ஆவேசமாக பதிலளித்திருக்கிறார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு கேள்விகளுக்கு மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார். அப்போது, "மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்ன செய்தது? மதுரை மற்றும் கோவை என இரண்டு முக்கியமான மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்தும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லையே" என்று திமுக எம்பி திருச்சி சிவா கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து தமிழகத்திற்கு மத்திய அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை நிர்மலா பட்டியலிட்டார். அதில் எயம்ஸ் மருத்துவமனை குறித்து பேசப்பட்டபோது தமிழக எம்பிக்கள் குரல் எழுப்பினர். இதனால் ஆவேசமடைந்த நிர்மலா, "நான் உங்களுக்குதான் பதில் சொல்கிறேன். அமைதியாக உட்கார்ந்து கேட்க வேண்டியது உங்கள் கடமை" என்று தமிழில் கூறினார். ஆனாலும் எம்பிக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.
"அவ்வளவு கோபம் வந்து எனில், தமிழிலேயே நான் உங்களுக்கு விளக்குகிறேன். ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டபோது, இவர்கள் காங்கிரஸுடன் கைகோர்த்து இருந்தார்கள். அப்போ எங்கே போனிங்க? அப்போ ஏன் காங்கிரஸ் கட்சியை கேட்கவில்லை? எப்போ பார்த்தாலும் மோடிதான் தமிழ்நாட்டுக்கு விரோதி என்று சொல்வது தப்பு" என்று தமிழில் கூறினார். இதனை கேட்ட எம்பிக்கள் ஆவேசமடைந்தனர்.
தொடர்ந்து பேசிய நிர்மலா, "அமைதியா உட்கார்ந்து கேட்பதற்கு உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? அமைதியா உட்கார்ந்து கேளுங்க. மனசுல தைரியம் வச்சிக்கோங்க. மனசுல திடத்தோட தமிழில் நான் பதில் சொல்றேன். கேட்டுகிட்டுபோங்க.. அங்க போய் தமிழ்நாட்டுல சொல்லுங்க. சும்மா இங்க கத்தாதீங்க. சென்னை மெட்ரோ பத்தி பதில் சொல்றேன்" என்று கூறினார்.
வாக்குவாதம் வேண்டாம் என்று சில எம்பிக்கள் வலியுறுத்திய நிலையில், "அவங்க என்னவேணும்னாலும் பேசலாம். நான் பேசக்கூடாதா? சிவா இன்னைக்கு காலையிலிருந்து 2 முறை பார்த்துவிட்டேன். நீங்கள் நியாயத்தை பேசுவது கிடையாது" என்று சொல்லி மெட்ரோ குறித்து ஆங்கிலத்தில் விளக்கம் அளித்தார்.
இந்த சலசலப்புகள் குறித்த வீடியோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வேகமாக ஷேராகி வருகிறது.
-
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications