நீலம்.. பட்ஜெட் நாளில் நிர்மலா சீதாராமன் உடுத்தியுள்ள புடவையின் நிறம்.. உணர்த்தும் குறியீடு என்ன?
டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை வாசிக்கும் நாளில் உடுத்தும் புடவையின் நிறத்தின் மூலம் சுபமான அறிவிப்பு வெளியாகும் என்று உணர்த்தியுள்ளார். நீலம் எப்போதுமே ஏழை மற்றும் மிடில்கிளாஸ் மக்களுக்கான நிறம். இன்றைய தினம் நிர்மலா சீதாராமன் ஏழை மக்கள் மனம் குளிரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளது.
பிரதமர் மோடி அணியும் ஆடைகளுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். விழா நாட்களில் விதவிதமாக விலை உயர்ந்த ஆடைகளை அணிவார் பிரதமர் மோடி. குடியரசு தினம், சுதந்திர தின நாட்களில் அணியும் உடையோடு தலைப்பாகை அணிவது சிறப்பு.

அதே போல மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணியும் புடவையை மக்கள் தவறாமல் கவனிப்பார்கள்.. அல்வா கிண்டும் நாளிலும் பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளிலும் அணியும் புடவையின் நிறத்திலேயே குறியீட்டை உணர்த்தி விடுவார் நிர்மலா சீதாராமன்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலுக்கு உள்ளே உள்ளே என்ட்ரி தரும்போதே, இன்றைய தினம் என்ன கலர் சேலையில் வந்து கொண்டிருக்கிறார் அவர் கையில் வைத்திருக்கும் பேக் நிறம் முதல் பரபரப்பான செய்திகள் லைவ் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுவாகவே எளிமையான புடவையைதான் அணிவார். கோவில் விழாக்களில் பங்கேற்கும் போது பட்டுப்புடவைகளை அணிந்து பங்கேற்பார். சில்க் காட்டன் புடவைகளைத்தான் அவர் விரும்பி அணிவார். இந்த ஆண்டு அல்வா கிண்டும் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 24ஆம் நடைபெற்றது. அதில் பங்பேற்ற நிர்மலா சீதாராமன் நீல கலர் பார்டர் வைத்த கிரே கலர் புடவையை அணிந்திருந்தார். அல்வா கிண்டப்பட்ட கடாயில் சிவப்பு துணியால் கட்டப்பட்டிருந்தது. அந்த சிவப்பு நிற துணியை நீக்கி விட்டு அல்வாவை அனைவருக்கும் பகிர்ந்தளித்தார். இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய இன்று வந்த நிர்மலா சீதாராமன் நீலகலர் புடவையில் வந்திருந்தார்.

கைத்தறி ஆடைகள் மீது நிர்மலா சீதாராமனுக்கு அலாதிப்பிரியம் உண்டு. சுப காரியங்களுக்கு பட்டுப்புடவைகள் அணிந்தாலும் பட்ஜெட் நாளில் கைத்தறி புடவைகளை அணிவார். கடந்த 2019ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட் தாக்கலின்போது தங்க நிற பார்டரில் இளஞ்சிவப்பு நிற மங்கல்கிரி பட்டுப் புடவை உடுத்தி இருந்தார். 2020ஆம் ஆண்டு மஞ்சள் நிற பட்டுபுடவை நீல நிற பார்டர் வைத்த புடவையை அணிந்து வந்து பட்ஜெட் தாக்கல் செய்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட் தாக்கலின்போது தங்க நிற பார்டரில் இளஞ்சிவப்பு நிற மங்கல்கிரி பட்டுப் புடவை உடுத்தி இருந்தார். 2020ஆம் ஆண்டு மஞ்சள் நிற பட்டுபுடவை நீல நிற பார்டர் வைத்த புடவையை அணிந்து வந்து பட்ஜெட் தாக்கல் செய்தார்.
கடந்த 2021 ஆண்டு பட்ஜெட் நாளில் அவர் உடுத்தியிருந்த உடை சிகப்பு-வெள்ளை வர்ணம் கொண்டதாகும். இது பெங்காலில் லால் பாத் புடவை என்று அழைக்கப்படுகிறது. இந்தப் புடவையை மேற்கு வங்கப் பெண்கள் முகூர்த்த நாட்களில் அணிவது வழக்கம்.
இது குறிப்பாக மேற்கு வங்கத்தின் குல தெய்வமாக கொண்டாடப்படும் துர்கா தேவியின் துர்கா பூஜை கொண்டாடப்படும் 10ம் நாளில் பெண்கள் அங்கு லால்-பாத் புடவை அணிந்து துர்க்கையம்மனுக்கு பிரியாவிடை கொடுப்பார்கள். அதே போல புடவையை கடந்த 2021 ஆம் ஆண்டு அணிந்திருந்தார். அது சில்க் காட்டன் போச்சம்பள்ளி புடவையாகும். கடந்த 2022ஆம் ஆண்டு மெரூன் நிற புடவை அணிந்திருந்தார் நிதியமைச்சர்.
கடந்த 2023ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் தன் பட்ஜெட் குழுவினருடன் செய்தியாளர்கள் முன்னால் தோன்றிய போது அடர் சிவப்பு நிற புடவை அரக்கு நிற கோபுர பார்டர் அதில் மஞ்சள் நிற ஜரிகை வைத்து அணிந்திருந்தார்.
பட்ஜெட் உரை தயாரிக்கும் முன்பு பாரம்பரியமாக அல்வா கிண்டும் பணி தொடங்கும். எந்த ஒரு நல்ல காரியம் நடக்கும் முன்பாக இனிப்போடு தொடங்க வேண்டும் என்ற பாரம்பரியம் உள்ளது. அதன்படி கடந்த 24ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டும் விழாவில் கலந்துகொண்டார். அப்போது,நிர்மலா சீதாராமன் நீல நிற பார்டர் கொண்ட இளம் கிரே நிற புடவை உடுத்தி இருந்தார்.
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய இன்று வந்த நிர்மலா சீதாராமன் நீலகலர் புடவையில் க்ரீம்கலர் ப்ளவுஸ் அணிந்து கையில் சிவப்பு நிற பேக் உடன் செய்தியாளர்கள் முன்பு தோன்றினார். ஜோதிட ரீதியாக நீல கலர் சனியின் ஆதிக்கம் நிறைந்தது. ஏழை மற்றும் மத்திய தர வர்க்க மக்களின் நிறம் நீலம். இன்றைய இடைக்கால பட்ஜெட்டில் ஏழைகள், மாத சம்பளதாரர்கள், மிடில்கிளாஸ் மக்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று குறியீடாக உணர்த்தியுள்ளார் நிர்மலா சீதாராமன்.
இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் மக்களின் மனங்கள் மகிழும் வகையில் இடைக்கால பட்ஜெட்டில் சிறப்பான அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications