கைலாசாவை உருவாக்க 1008 காரணங்கள் இருக்கு.. முதல் காரணம் இதுதான்.. சஸ்பென்ஸை உடைத்த நித்தி!
டெல்லி: கைலாசா ஏன் தேவை என்பதற்கு 1008 காரணங்கள் இருக்கின்றன என நித்யானந்தா தனது ஆடியோ பதிவில் தெரிவித்துள்ளார். அதில் முதல் காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
கைலாசா நாடு குறித்து நாளுக்கு நாள் ஒவ்வொரு கருத்தை வெளியிட்டு அந்த நாட்டின் மீதான எதிர்ப்பார்ப்பை எகிற வைத்து வரும் நித்யானந்தா, தனது ஆடியோவில் கூறியிருக்கையில் முதல் மனிதனின் பூர்வீகம் ஆதி குமரி கண்டமே. குமரி கண்டம் இருந்தது உண்மை.
அந்த குமரி கண்டத்தின் உச்சம் தான் தற்போதைய ஆஸ்திரேலியாவும், ஆப்பிரிக்காவும், மடகாஸ்கரும், இந்தியாவும், இலங்கையும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

தெளிவு
பரமசிவ பரம்பொருள் தானே நேரடியாக பூமிக்கு இறையனாராக சுந்தரேசபெருமாள் சொக்கநாதனாக வந்திருந்து ஆதிபாண்டிய மன்னாய் இருந்து மனித சமூகத்தை நிறுவினார் என்பதை நாங்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளோம்.

மறுமலர்ச்சி
பெரும்பேறுபெற்ற இந்த ஞானபரம்பரை கைலாயமாக மலர்ந்தாக வேண்டிய, மறுமலர்ச்சி செய்யப்பட்டு, உலகத்திற்கு அளிக்கப்பட வேண்டிய காலம் வந்து விட்டது. இதனால் இந்த கைலாயம் மலர்ந்திருக்கிறது. ஒரு லட்சம் பேர் நிரந்தரமாக வாழுகின்ற இடமாக அடுத்த 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் கட்டமைக்கப்படும்.

குமரி கண்டம்
பரமசிவ பரம்பொருள் குமரி கண்டம் செய்தபோது என்னவெல்லாம் இறை இயல் விஞ்ஞானங்கள், மொழியியல் ஞானங்கள், அரசியல், அறிவியில், புவியியல், வரலாறு, வரலாறு சார்ந்த அறிவியல் என எல்லாதுறைகளிலும் அவர் அளித்த வாழ்க்கை முறைகளை புனரமைப்பு செய்து அவைகள் மூலமாக மனித இனத்திற்கு எல்லா சாத்தியமான சேவைகளை செய்துவதுதான் கைலாயத்தின் நோக்கம்.

முதல் காரணம்
ஏன் கைலாயம் தேவை என்பதற்கு 1008 காரணங்களை அடுத்தடுத்த சத்சங்கங்களில் விளக்குகிறேன். முதல் காரணம் ஒன்றை உங்களோடு பகிர்கிறேன். குமரி கண்டத்தின் மறுமலர்ச்சியே கைலாசம், மகா கைலாசம். பரமசிவ பரம்பொருள் நேரில் வந்து பூமியில் மலர செய்ததுதான் குமரி கண்ட வாழ்க்கை முறை. அதை மீண்டும் மலர செய்வதுதான் கைலாயத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications