அன்று பெருமாள் அலங்காரம்.. இன்று நவராத்திரி அலங்காரம்.. போட்டோ ஷூட் எடுத்த நித்யானந்தா!
டெல்லி: "கைலாசா அதிபர்" நித்யானந்தா நவராத்திரி விழாவையொட்டி தினந்தோறும் ஒரு அலங்காரத்தில் வந்து பக்தர்களை பரவசப்படுத்தி வருகிறார்.
பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நித்யானந்தா கைலாஷா எனும் நாட்டில் இருப்பதாக தெரிவித்து வருகிறார். மேலும் அந்த நாட்டின் அதிபரும் தான்தான் என்கிறார். உண்மையில் அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை.
தனது நாட்டிற்கான கொடியையும் பாஸ்போர்ட்டையும் அவர் வெளியிட்டு பெரும் அலப்பறை செய்தார். மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு கைலாசாவில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவும் தெரிவித்தார்.

தொழில்
அந்த நாட்டிற்காக கரன்சியையும் அவர் வெளியிட்டார். மேலும் தொழில் செய்ய தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அழைத்தார். மேலும் தான் தனித்து இந்த கைலாசாவில் இருக்கும் போது தன்னை ஏளனமாக பேசியவர்கள் இன்று கொரோனாவால் அனைவரையும் தனித்து இருக்குமாறு அரசாங்கமே சொல்கிறது என கிண்டல் செய்தார்.

வீடியோ
தினந்தோறும் வீடியோவில் தோன்றி பக்தர்களிடம் சத்சங்கம் நடத்தி வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருப்பதி ஏழுமலையான் போல் அலங்காரம் செய்திருந்தார். இதை பார்த்த ஏழுமலையான் பக்தர்கள் நித்யானந்தாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இன்று நாடே கொரோனாவால் அவதிப்பட்டு வரும் நிலையில் நித்யானந்தாவோ எந்த வித கவலையும் இல்லாமல் இருந்து வருகிறார் என்றே தெரிகிறது.

மதுரை ஆதீனம்
இந்த நிலையில் மதுரையின் புதிய ஆதீனம் நான்தான் என்றும் பதவி ஏற்றுக் கொண்டு விட்டேன் என்றும் கூறிய அவர் மதுரை ஆதீனம் இறந்ததற்கு கொடி அரைக் கம்பத்தில் பறக்கும். ஆதீனத்தை அடக்கம் செய்யும் வரை கைலாசா நாட்டு மக்கள் உணவருந்த கூடாது என விதிகளை பிறப்பித்தார். மேலும் குழந்தைகளுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு என்றும் அறிவித்தார்.

நித்தி கெட்டப்
இப்படி பல அலப்பறைகளை செய்த நிலையில் நவராத்திரியை முன்னிட்டு பல்வேறு அலங்காரங்களில் போட்டோக்களை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார் நித்யானந்தா. நவராத்திரிக்கு வெவ்வேறு விதமான போஸ் கொடுத்து அமர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. நாளை ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த பூஜையையொட்டி நித்யானந்தா என்னவெல்லாம் செய்ய போகிறார் என தெரியவில்லை.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications