Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நித்தி வழக்கில் திடீர் திருப்பம்.. 2 பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நித்தி வழக்கில் திடீர் திருப்பம்... 2 பெண் சீடர்கள் புதிய தகவல்

    டெல்லி: நித்யானந்தா வழக்கு தொடர்பாக அவரது பெண் சீடர்களும் ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஹாஜீபூரில் ஒரு பள்ளியை ஆக்கிரமித்து நித்யானந்தாவின் ஆசிரமம் இயங்கி வந்தது. இந்த ஆசிரமத்தில் நித்யானந்தாவின் முன்னாள் செயலாளர் ஜனார்த்தன சர்மாவின் 3 மகள்களும் ஒரு மகனும் இருந்ததாக கூறப்படுகிறது.

    ஆசிரமத்தில் தனது குழந்தைகள் சித்திரவதை செய்யப்படுவதாகவும் அவர்களை மீட்டுத் தரும்படியும் அகமதாபாத் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து ஆசிரமத்தில் சோதனை நடத்தி அவரது ஒரு மகள், ஒரு மகனை போலீஸார் மீட்டனர்.

    குஜராத் ஹைகோர்ட்

    குஜராத் ஹைகோர்ட்

    எனினும் அவரது 18 வயதுக்கு மேற்பட்ட இரு மகள்கள் ஆசிரமத்தில் இல்லை. அவர்கள் நித்யானந்தாவுடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்டுத் தரக் கோரி ஜனார்த்தன சர்மா குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

    லைவாக பேச்சு

    லைவாக பேச்சு

    இந்த நிலையில் நித்யானந்தா ஈகுவடார் நாட்டுக்கு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு அவர் இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்தது. தலைமறைவாக இருந்தாலும் அவ்வப்போது நித்யானந்தா லைவாக தோன்றி பேசி வருகிறார்.

    பனாமா கால்வாய்

    பனாமா கால்வாய்

    அவரது வீடியோக்கள் வெளியிடப்படும் கம்ப்யூட்டரின் ஐபி முகவரியை வைத்து ஆய்வு செய்ததில் அவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கும் பனாமா கால்வாய்க்கும் இடையே ஒரு இடத்தில் தங்கியிருக்கலாம் என தெரிகிறது.

    டிரினிடாட்

    டிரினிடாட்

    இதனிடையே ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்களும் நித்யானந்தாவின் சீடர்களாகிவிட்டனர். வழக்கு விசாரணையில் சர்மாவின் மகள்கள் சாலை மார்க்கமாக நேபாளம் சென்றுள்ளனர். அங்கிருந்து கரீபியன் தீவான டிரினிடாட்டுக்கு சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

    விர்ஜீனியாவில்

    விர்ஜீனியாவில்

    இந்த நிலையில் சர்மாவின் மகள்கள் சார்பில் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கள் தந்தை சர்மாவுடன் செல்ல விருப்பம் இல்லை என்றும் அமெரிக்காவின் விர்ஜீனியாவில் தங்கியிருப்பதாகவும் ஆனால் சரியான முகவரி தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர். அப்படியென்றால் நித்யானந்தாவும் விர்ஜீனியாவில் இருக்கலாம் என தெரிகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+