மோடியுடன் பிரதமர் பதவிக்கான போட்டியா.. மனம் திறந்தார் நிதின் கட்கரி
டெல்லி: பிரதமர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெளிவுபடுத்தியுள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பதிலாக பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நிதின் கட்கரி நிறுத்தப்படலாம், என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் வலியுறுத்தலால் பாஜக வேறுவழியின்றி, நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தும் என்று முன்னணி ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்தியா டுடே ஊடகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நிதின் கட்கரி, இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நிதின் கட்கரி, அந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: பிரதமர் பதவிக்கான பந்தயத்தில் நான் கிடையாது. பிரதமர் நரேந்திர மோடி தான் தேர்தலுக்குப் பிறகும் பிரதமராக இருக்கப் போகிறார்.
நான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வளர்ப்பு. எனவே, நாட்டுக்கு சேவை ஆற்றுவது எனது முதன்மையான பணி. பிரதமரின் பக்கபலமாக நாங்கள் அனைவரும் இருப்போம்.
நரேந்திர மோடியின், சிந்தனையை செயலாக்கும் பணியாளர்களில் நானும் ஒருவன். மோடி அரசு வந்த பிறகு, கங்கை நதியில் ஓடும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இன்னும் 13 மாத கால கட்டத்திற்குள் கங்கைநதி முழுவதுமாக சுத்தமாகும். வேலைவாய்ப்பை எதிர்பார்பவர்களாக, இருக்காதீர்கள். பிறருக்கு வேலை கொடுப்பவராக இருங்கள்.
நான் எப்போதுமே வேலையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று விரும்புவன். எனது கை நிறைய ஏதாவது ஒரு வேலையை வைத்துக் கொண்டே இருப்பேன். இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications