மோடியின் பிரதமர் பதவிக்கு சீக்கிரமே ஆப்பு வைக்க போகும் நிதின் கட்காரி.. கொளுத்திப் போடும் லாலு கட்சி
டெல்லி: பிரதமர் பதவிக்கான போட்டி தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருக்கும் கருத்துகள், பாஜகவில் அதிகார யுத்தம் மையம் கொண்டிருப்பதையே வெளிப்படுத்துகிறது என லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி மூத்த தலைவர் மனோஜ் ஜா தெரிவித்துள்ளார். நிதின் கட்காரியின் கருத்து மூலம் நரேந்திர மோடி வகித்து வரும் பிரதமர் பதவிக்கு விரைவில் நெருக்கடி வரக் காத்திருக்கிறது என்றும் மனோஜ் ஜா குறிப்பிட்டுள்ளார்.
2019, 2024 லோக்சபா தேர்தல்களின் போது பிரதமர் பதவிக்கான போட்டியில் நிதின் கட்காரி பெயரும் அடிபடும். ஆனால் நிதின் கட்காரி இந்த யூகங்களை திட்டவமட்டமாக மறுத்து பதிலளிப்பார். 2024 லோக்சபா தேர்தலின் போது நிதின் கட்காரி போட்டியிட்டது ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூர் லோக்சபா தொகுதியில். ஆனாலும் நிதின் கட்காரியை தோற்கடிக்க பாஜக மேலிடத் தலைவர்களே சதி செய்தனர் என்பது ஊடகங்களில் வெளியான செய்தி.

நிதின் கட்காரி தேர்தலில் வென்றுவிட்டால் நிச்சயம் பிரதமர் பதவிக்கான போட்டியாளராக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் முன்னிறுத்தப்படுவார் என்பது பாஜக மேலிடத் தலைவர்களுக்கு தெரிந்தே இருந்தது. இதனால்தான் பாஜக தலைவர் ஜேபி நட்டா, ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிராகவும் கருத்துகளை தெரிவித்து வந்தது சர்ச்சையாகவும் வெடித்தது.
தற்போது நிதின் கட்காரி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தம்மை பிரதமர் பதவிக்கு ஆதரவளிக்க தயார் என மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்திருந்தார். ஆனால் தமக்கு பிரதமர் பதவி மீது விருப்பம் இல்லை என்பதால் நிராகரித்துவிட்டேன் என கூறியிருந்தது புதிய சர்சையாக வெடித்துள்ளது.
இது தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் ஜா கூறியதாவது: பாஜகவில் அதிகார யுத்தம் நடைபெற்று வருவதையே நிதின் கட்காரியின் பேட்டி வெளிப்படுத்துகிறது. பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியை தேர்வு செய்தது பாஜக அல்ல. இந்த முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள்தான் இணைந்து மோடியை பிரதமராக தேர்வு செய்திருந்தன. நிதின் கட்காரி என்ன சொல்ல வருகிறார் என்பது இன்னமும் சில மாதங்களில் புரிந்துவிடும் (மோடியின் பிரதமர் பதவிக்கு நெருக்கடி ஏற்படும்). இவ்வாறு மனோஜ் ஜா கூறினார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications