கார்களுக்கு சுங்கச்சாவடி பாஸ்! தேதியை அறிவித்தது மத்திய அரசு! 3 ஆயிரம் கட்டினாலும் இப்படி ஒரு கண்டிஷனா?
டெல்லி: கார்களுக்கு சுங்கச்சாவடி பாஸ் ஆகஸ்ட் 15 முதல் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். இதன்படி, 3 ஆயிரம் ரூபாய் செலுத்தி பாஸ் வாங்கினால் 200 முறை சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் பயன்பாட்டு வாகனத்திற்கு மட்டுமே இது பொருந்தும்.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் எனப்படும் சுங்கச்சாவடிகள் உள்ளன. நாடு முழுவதும் 880க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச் சாவடிகளில் இரு சக்கர வாகனங்களை தவிர இதர வாகனங்கள் செல்வதற்கு சுங்கக் கட்டணம் செலுத்துவது அவசியம்.

சுங்கச்சாவடி கட்டணம்
தேசிய நெடுஞ்சாலைகளில் கார், பேருந்துகளில் செல்லும் போது அனைத்து வாகனங்களும் ஒரு சில வினாடிகள் நின்று பாஸ்ட் டேக் ஸ்கேன் ஆன பிறகு செல்வதை பார்த்து இருப்போம். இந்த பாஸ்ட் டேக் மூலமாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மிக்க நேரத்தில் சுங்கசாவடிகளில் இந்த பாஸ்ட் டேக் அடிப்படையில் கட்டணம் செலுத்தும் போது சில நிமிடங்கள் தாமதம் ஆனாலே வாகனங்கள் அணி வகுத்து நிற்பதை பார்க்க முடியும்.
சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பது மற்றும் நெரிசலை தவிர்க்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயண தூரத்தின் அடிப்படையில் சுங்கச் சாவடி கட்டணம் வசூலிக்கும் முறை கொண்டு வருவது பற்றிய ஆலோசனையிலும் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது.
ஆகஸ்டு 15 முதல்
இதற்கிடையே, சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் செலுத்தினல் வருடம் முழுவதும் சுங்கச்சாவடிகளில் பயணிக்கும் வகையிலான திட்டத்தை விரைவில் மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தான், வருடத்திற்கு 3 ஆயிரம் செலுத்தி சுங்கச்சாவடிகளில் பயணிக்கும் முறை வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் இருந்து அமலாகும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நிதின் கட்காரி அறிவிப்பு
மத்திய நெடுஞ்சாலைத்தூறை அமைச்சர் நிதின் கட்காரி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளர். அவர் கூறியிருப்பதாவது: பாஸ்ட் டேக் அடிப்படையிலான ஆண்டு பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 3 ஆயிரம் செலுத்தி பயணிக்கும் வசதி வரும் ஆகஸ்ட் 15 முதல் அமல்படுத்தப்படும்.
ஓராண்டுக்கு 200 முறை பயணம் செய்து கொள்ளலாம். ஓராண்டு அல்லது 200 பயணங்கள் எது முதலில் வருகிறதோ அது வரை இது செல்லுபடியாகும். இந்த 3 ஆயிரம் செலுத்தி பாஸ் எடுக்கும் வசதி வணிக வாகனங்களுக்கு பொருந்தாது. கார்கள், ஜீப்கள், வேன்கள் போன்ற தனிநபர் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications