Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்டிஏ அமைச்சரவையில் ஒரு முஸ்லீம் அமைச்சர்.! முதல்வர் நிதிஷ் என்றாலும் பவர் முழுக்க பாஜகவுக்கு தான்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீகார் மாநிலத்தில் 10வது முறையாக நிதிஷ்குமார் முதல்வர் பதவியேற்றார். அப்போது அவருடன் சேர்த்து பீகார் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பீகார் அமைச்சரவையில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைத்தன.. குறிப்பாக பாஜகவுக்கு எவ்வளவு இடம்.. அமைச்சரவையில் இருக்கும் ஒரே முஸ்லீம் யார் என்பது குறித்த தகவல்களை நாம் பார்க்கலாம்!

பீகாரில் நடந்த சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. 200+ இடங்களில் வென்று பீகார் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தது. இதையடுத்து நிதிஷ்குமார் 10வது முறையாக முதல்வராகப் பதவியேற்றார். பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் 26 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

Nitish Kumar cabinet Bihar took lion share still JDU has decent number with sole Muslim minister

பதவியேற்பு விழா

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கவர்னர் ஆரிப் முகமது கான், அவர்களுக்குப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த அமைச்சரவையில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம் கிடைத்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

பாஜகவுக்கே அதிக பவர்

இந்த புதிய அமைச்சரவையில் அதிகபட்ச இடங்கள் பாஜகவுக்கே செல்கிறது. சட்டசபைத் தேர்தலில் 101 இடங்களில் போட்டியிட்டு 89 இடங்களில் பாஜக அங்கு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனால் அமைச்சரவையில் அவர்களுக்குத் தான் அதிகபட்ச இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு அமைச்சரவையில் 14 இடங்கள் அமைச்சரவையில் தரப்பட்டுள்ளது.

இதர கட்சிகள்

நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு 85 இடங்களில் வென்ற நிலையில், முதல்வர் பதவியுடன் சேர்த்து அக்கட்சிக்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் பதவி வழங்கப்பட்டதால் அமைச்சரவையில் இடம் குறைக்கப்பட்டுள்ளது. இதுபோக இதர கூட்டணிக் கட்சிகளுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) கட்சிக்கு அமைச்சரவையில் இரு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சிகளில் இருந்து தலா ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் முதல்வரோடு சேர்த்து 27 பேர் இன்று பதவியேற்றனர்.

இந்த என்டிஏ அமைச்சரவையில் 9 புது முகங்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் அமைச்சராகப் பதவியேற்ற சஞ்சய் குமார் சிங் குறிப்பிடத்தக்கவர். மஹுவா தொகுதியில் போட்டியிட்ட அவர், லாலு பிரசாத் பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை தோற்கடித்தார். தேஜ் பிரதாப் யாதவை இந்த முறை தனியாகக் கட்சி ஆரம்பித்துப் போட்டியிட்டிருந்தார். அவரை வீழ்த்தியதற்காகவே சஞ்சய் குமாருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது.

முஸ்லீம் அமைச்சர்

நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் ஒரே ஒரு முஸ்லிம் உறுப்பினர் மட்டுமே உள்ளார். ஜேடியு கட்சியின் முகமது ஜமா கான் என்பவர் மட்டுமே அமைச்சரவையில் இருக்கும் ஒரு முஸ்லீம் ஆவார். பீகாரில் செயின்பூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், ஆர்ஜேடி வேட்பாளரை சுமார் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார்.

71 வயதான நிதிஷ் குமார் இந்த முறை சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. சொல்லப்போனால் அவர் முதல்வராகப் பதவியேற்ற பிறகு ஒரு முறை கூட எம்எல்ஏவாக தேர்வு செய்யப்படவே இல்லை. பீகாரில் சட்டசபையை போலவே சட்ட மேலவையும் இருக்கிறது. அதில் நிதிஷ் குமார் எம்எல்சி ஆக இருப்பதால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+