முன்னாடிலாம் இப்படி பண்ண முடியுமா? ஸ்டேஜில் மோடி இருக்கும் போதே.. கையை இழுத்து.. நிதிஷ் ஷாக் சம்பவம்
டெல்லி: மீட்டிங் ஒன்றில் பிரதமர் மோடி அமர்ந்திருக்க அவரிடம் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நடந்து கொண்ட விதம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
முன்பெல்லாம் பிரதமர் மோடி ஸ்டேஜில் இருக்கும் போது அவர் அருகிலேயே யாரும் அமர முடியாது. அவர்தான் லைம்லைட்டில் இருப்பார். 10 ஆண்டுகளில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்த போதெல்லாம் மோடி தனியாகவே இருப்பார். அதிலும் மோடியை போட்டோ எடுக்கும் சமயங்களில் அவரின் அருகே கூட யாரும் செல்ல முடியாது.

போட்டோ எடுக்க கூட யாரும் நின்றால் கூட அவர்களை மோடி தள்ளி அமர வைக்கும், தள்ளி விடும் சம்பவங்கள் நடந்து உள்ளன.
மோடி மெஜாரிட்டி இல்லை; ஆனால் இப்போது மோடிக்கு மெஜாரிட்டி இல்லை. அவர் இருப்பது மைனாரிட்டி அரசு. இதனால் முன்பு போல அவரால் தனித்து செயல்படவில்லை. அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பு கூட ஒரு பக்கம் சந்திரபாபு நாயுடு இன்னொரு பக்கம் நிதிஷ் குமார் ஆகியோரை அமர வைத்து மோடி போட்டோ எடுத்தது கவனம் பெற்றது.
இப்படிப்பட்ட நிலையில்தான் மீட்டிங் ஒன்றில் பிரதமர் மோடி அமர்ந்திருக்க அவரிடம் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நடந்து கொண்ட விதம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

மோடி அமர்ந்திருக்கும் போது நிதிஷ் குமார் அவரை இழுத்து.. அவரின் கையை இழுத்த நிதிஷ் குமார் மோடியின் விரலில் இருக்கும் மையை பார்த்து இந்த மை அழியவில்லையா என்பது போல கேட்டார். இதற்கு மோடி எதோ பதில் சொல்ல.. நிதிஷ் குமார் தன்னுடைய விரலை காட்டி மையை சுட்டிக்காட்டினார். முன்பெல்லாம் மேடையில் மோடியிடம் இப்படி எல்லாம் யாரும் நடந்து கொள்ள முடியாது.
ஆனால் மைனாரிட்டி ஆட்சியில் நிதிஷ் குமார் மோடியை இப்படி நடத்தியது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
Nitish checks the indelible ink mark on Modi's finger😂🤣
— Mannu (@mannu_meha) June 19, 2024
If the 56-inch had gotten 400 paar, no one would have dared to touch him like Nitish Babu😂 pic.twitter.com/tzoSaZJ69G
மைனாரிட்டி ஆட்சி; 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
240 இடங்களில் பாஜக வென்றுள்ளது இதனால் பாஜக ஆட்சி அமைக்க என்டிஏவில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஆதரவு தேவை. இது போல லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஆகியோரின் ஆதரவும் தேவை.
பாஜக ஆட்சி அமைக்க பீகாரில் உள்ள நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 12 எம்பிக்கள் உள்ளனர். பாஜக ஆட்சி அமைக்க ஆந்திர பிரதேசத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 16 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவுடன்தான் பாஜக தற்போது ஆட்சி அமைத்துள்ளது.
-
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து?












Click it and Unblock the Notifications