மத்திய அமைச்சரவை மாற்றம்.. 4 இடங்கள் கேட்டு பாஜகவுக்கு நெருக்கடி தரும் நிதிஷ்குமாரின் ஜே.டியூ.
டெல்லி: மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தங்களது 4 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று பாஜகவின் கூட்டணி கட்சியான பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜே.டியூ. (ஐக்கிய ஜனதா தளம்) வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு எந்த நிமிடத்திலும் வெளியாகலாம் என கூறப்படுகிறது. சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள உத்தரப்பிரதேசத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அமைச்சரவை விரிவாக்கத்தில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்துக்கும் இந்த அமைச்சரவை மாற்றத்தில் முக்கியத்துவம் தரப்படலாம் என்கின்றன தகவல்கள். இந்த நிலையில் ஜேடியூ தங்களுக்கு 4 இடங்கள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாம்.

ஜேடியூவுக்கு 4 இடம்
லோக்சபா தேர்தலில் பீகாரில் பாஜக 17 இடங்களிலும் ஜேடியூ 16 இடங்களிலும் வென்றது. இதன் அடிப்படையில் மத்திய அமைச்சரவை பதவிகள் ஒதுக்க வேண்டும் என்கிறதாம் நிதிஷ்குமாரின் ஜேடியூ. 2 கேபினட் அமைச்சர் பதவிகள், 2 இணை அமைச்சர் பதவிகள் தேவை என்பதில் ஜேடியூ பிடிவாதமாக உள்ளதாம்.

ஜேடியூ நிலைப்பாடு
2019 லோக்சபா தேர்தல் முடிந்ததும் 3 அமைச்சர் பதவிகளை கேட்டது ஜேடியூ. ஆனால் பாஜக மறுத்துவிட்டதால் அமைச்சரவையிலும் சேராமல் ஒதுங்கிக் கொண்டது ஜேடியூ. தற்போதைய பிரதமர் மோடி அமைச்சரவையில் குடியரசு கட்சியின் ராம்தாஸ் அத்வாலே மட்டும்தான் பாஜகவின் கூட்டணி கட்சியை சேர்ந்த அமைச்சர்.

கூட்டணி கட்சிகளுக்கு இடம்
ஏற்கனவே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சிரோமணி அகாலிதளம், விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவுடனான கூட்டணியையே முறித்து கொண்டது. இதனால் தற்போதைய அமைச்சரவை விரிவாக்கத்தில் கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் தர விரும்புகிறாராம் பிரதமர் மோடி.

தமிழக கட்சிகளுக்கு இடம்?
ஜேடியூ, அப்னா தள், லோக் ஜனசக்தியின் அதிருப்தி அணி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவை விரிவாக்கத்தில் கண்டிப்பாக இடம் இருக்கிறதாம். அதேநேரத்தில் தமிழக கூட்டணி கட்சிகளான அதிமுக, பாமக, த.மா.காவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா? என்பதும் உறுதியாக தெரியவில்லை.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications