"4 பேரு, 4 விதமா, நாலு விஷயத்த பேசினா அது நாடு.. அந்த 4 பேரும் நித்யானந்தாவை பேசினா அது தமிழ்நாடு"
டெல்லி: நாலு பேரு நாலு விதமா, நாலு விஷயத்த பேசினால் அது நாடு. அந்த 4 பேருமே 4 விதமா நித்யானந்தாவை பத்தி மட்டுமே பேசினால் அது தமிழ்நாடு என நித்யானந்தா தமிழகத்திற்கு ஒரு வரைமுறையை வகுத்துள்ளார்.
பாலியல் புகாரில் தேடப்பட்டு வரும் நித்யானந்தா எங்கோ வெளிநாட்டில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரை நாளை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அவர் பாட்டுக்கு வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார்.
ஒரு நேரம் ஹீரோ போல் பஞ்ச் பேசுகிறார். மறுபுறம் காமெடியன் போல் காமெடியன் போல் பேசுகிறார். இந்த நிலையில் இன்றைய தினம் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு என்றால் என்ன என்பதற்கான வரையறையை அவர் வகுத்துள்ளார்.

பெரிய தலைவர்கள்
அவர் பேசிய வீடியோவில் கூறுகையில் ஒரு வருஷம் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நாட்டில யாராவது பெரிய தலைங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கு நித்யானந்தாவின் பெயரை பயன்படுத்துவார்கள்.

கதையை கிளப்புதல்
ஓரிரு நாட்கள் இழுப்பார்கள். ஏதாவது ஒரு வதந்தி, கதையை கிளப்பிவிடுவார்கள். அடி அடினு அடிபபாங்க. ஒரு 2 கேஸை போடுவார்கள். அங்கும் இங்கும் அலைக்கழிப்பார்கள். அடிக்கும் போதே நடுவில் இவன் என்ன அடிச்சாலும் தாங்குறானே இவன் ரொம்ப நல்லவனு ஒரு வார்த்தை சொல்வாங்க.

நித்யானந்தா
நானும் சரின்னு அதை கேட்டுகிட்டு நல்லவன்னு சொல்லிட்டாங்களேனு அவங்க என்ன செய்தாலும் தாங்கிகிட்டு அப்படியே இருப்பேன். நாலு பேரு நாலு விதமா, நாலு விஷயத்த பேசினால் அது நாடு. அந்த 4 பேருமே 4 விதமா நித்யானந்தாவை பத்தி மட்டுமே பேசினால் அது தமிழ்நாடு.

தன்மை
என்னய்யா இது. உங்களுக்கே இது நல்லாயிருக்கா. இது அடுக்குமா. இது தர்மம்தானா. நான் என்னை காமெடி பீஸ் மாதிரி காட்ட முயற்சி செய்வது நீங்கள் எல்லாரும் உங்களையும் என்னையும் இனிமையோடு இணைத்து உணருகிறீர்கள். காரணம் என்னவென்றால், உங்கள் யாருக்குள்ளேயுமே காமெடியாக இருக்கிறதை தன்மையாக நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். உங்கள் தன்மையோடு என் தன்மை ஒத்து போகும் போது நீங்களும் நானும் ஒன்று என உணர்கிறீர்கள் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications