அவன் நான் இல்லை.. எல்லாவற்றுக்கும் காரணம் என் உடலில் புகுந்திருக்கும் பரமசிவன்தான்.. நித்யானந்தா
Recommended Video
டெல்லி: என் மீது பழி சுமத்துவர்கள் முட்டாள்கள். நான் மனிதத்தின் எதிர்காலம் என நித்தியானந்தா புதிய வீடியோவில் தெரிவித்துள்ளார்.
நித்யானந்தாவின் பெயர் அப்போதெல்லாம் எப்பயாவதுதான் அடிபடும். ஆனால் தற்போது அவரது பெயரை சொல்லாத நாளே இல்லை என சொல்லும் அளவுக்கு தினமும் எதையாவது கூறி நம்மை "மகிழ்ச்சிப்படுத்தி" வருகிறார்.
இந்த நிலையில் கைலாஷா என்ற தனிநாட்டை அவர் உருவாக்கியுள்ளதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. அது எங்கே இருக்கிறது என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது.

உருவாக்குங்கள்
தினமும் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் அவர் நேற்று முன் தினம் லைவாக தனது சேனலில் தோன்றினார். அப்போது அவர் கைலாஷா இணையதளத்தை தினமும் 8 லட்சம் பேர் பார்த்து வருகின்றனர். சிலர் தங்கள் நாடுகளில் கைலாசாவை உருவாக்குங்கள் என்று்ம கூறிவருகின்றனர்.

சர்வர்
இன்னும் சிலரோ கைலாசாவுக்காக தங்கள் நிலங்களை தருவதாக கூறி வருகின்றனர். எனக்கு கொஞ்ச கால அவகாசம் தந்தால் பதில் கூறுகிறேன். தினமும் இணையதளத்தை பார்ப்பதால் சர்வரே போய்விட்டது. புதிய சர்வரை மாற்றியுள்ளோம் என்றார்.

குடியுரிமை
மேலும் 12 லட்சம் பேர் கைலாசாவில் குடியேற இணையதளத்தில் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர் என்றார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வீடியோவை உருவாக்கியுள்ளார். அதில் இ-ஸ்ரீகைலாசா என்பது குடியுரிமை அல்ல. அது எல்லைகளற்ற ஆன்மீக பெருவெளி.

புகழ்
கைலாசாவில் செல்லப்பிராணிகளையும் இணைக்கலாம். அவற்றுக்கும் சிறப்பு பரிசுகள் உள்ளன. ஒவ்வொரு முறையும் தன் மீது பழி சுமத்தப்படும் போது நாம் நேர்மையானவர்கள் என மெய்ப்பிக்கிறோம். அதன் மூலம் நமது புகழ் மேலும் உயருகிறது.

கைலாசத்தை உருவாக்குதல்
பலர் நம் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஒருவரை தாக்குபவர்கள் சரித்தரம் படைக்கமாட்டார்கள். தாக்குதலை எதிர்கொள்பவர்கள்தான் வரலாறு படைப்பார்கள். முட்டாள்கள்தான் ஒருவரை தாக்குவார்கள். நாம்தான் மனிதத்தின் எதிர்காலம். என் சீடர்கள் என்னை நினைத்து பரணி தீபத்தை கையில் ஏந்தியபடி ஆசிரமத்தைச் சுற்றி வந்துள்ளார்கள். எனது உடலைப் பயன்படுத்தி பரமசிவன் இவ்வுலகில் கைலாசத்தை உருவாக்குகிறார் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications