NLC: ITI படிப்பு, உதவித் தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி... 10-ம் வகுப்பு பாஸ் செய்திருந்தால் போதும்!
நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் ஐ.டி.ஐ. படிப்பு மற்றும் உதவித் தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.
மத்திய அரசின் நவரத்னா நிறுவனங்களில் ஒன்று என்.எல்.சி. இந்நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.
Fitter freshe/ Electrician fresher - பயிற்சி இடங்கள் 20 +20 - பயிற்சி காலம் 24 மாதம்- மாத உதவித் தொகை (முதலாம் ஆண்டு ரூ 8766; 2-ம் ஆண்டு 10,019) கல்வித் தகுதி: 2019/20/21-ல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி

Welder fresher/Medical Lab Technician Pathology/Medical Lab Technician Radiology- பயிற்சி இடங்கள் 20 +10 +5 - பயிற்சி காலம் (Welder 15 மாதம்- இதர 15- மாத உதவித் தொகை (முதலாம் ஆண்டு ரூ 8766; 2-ம் ஆண்டு 10,019) கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு (Biology/Science Group)
வயது வரம்பு: 01.06.2001 அன்று 14 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இதற்கு முன் இப்பயிற்சி பெற்றவர்கள் அல்லது தற்போது பயிற்சியில் இருப்பவர்கள் மீண்டும் பயிற்சி பெற தேவை இல்லை.
வரும் ஆக. 9-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை https://www.nlcindia.in/ இணையதளத்தில் ஆன்லைன் ரெஜிஸ்டிரேசன் படிவத்தை நிரப்பி பிரின்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Fitter fresher/ Electrician fresher/ Welder fresher- க்கு விண்ணப்பிப்போர் 2019/2020-ம் ஆண்டு 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்/ 2021-ம் ஆண்டு 9-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்/ டி.சி/ ஜாதி சான்றிதழ்/ ஆகியவற்றின் நகல்களுடன் இணைத்து ஆக. 23-ந் தேதி மாலை 5 மணிக்குள் கீழ் காணும் முகவரிக்கு நேரிலோ அஞ்சலிலோ அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: பொதுமேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், என்.எல்.சி. இந்தியா நிறுவனம், வட்டம்-20; நெய்வேலி- 607803.
குறிப்பு: என்.எல்.சி.க்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு உள்ளது; அதேபோல் இந்திய அரசு நிறுவனம் என்பதால் ஓபிசி சான்றிதழ் கட்டாயம் தேவை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications