டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா 3ம் அலையில்.. குழந்தைகள் பாதிப்படைவார்கள் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.. எய்ம்ஸ் இயக்குனர்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டால் அதில் குழந்தைகள்தான் அதிகம் பாதிப்படைவார்கள் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை, என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக மோசமாக தாக்கி, தற்போது ஓய்ந்து உள்ளது. தினசரி கேஸ்கள் மே மாதத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான நிலையில் தற்போது ஒன்றரை லட்சத்திற்கும் குறைவான கேஸ்கள்தான் பதிவாகிக்கொண்டு இருக்கிறது.

8 அடி ராஜநாகம்கூட இவருக்கு ஜுஜுபி தான்.. லாவகமாக பாம்பு பிடித்து அசத்தும் ஒடிசா பெண்!8 அடி ராஜநாகம்கூட இவருக்கு ஜுஜுபி தான்.. லாவகமாக பாம்பு பிடித்து அசத்தும் ஒடிசா பெண்!

இந்தியாவில் இரண்டாம் அலை முடிந்துள்ள நிலையில், மூன்றாம் அலை விரைவில் தொடங்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

மருத்துவமனை

மருத்துவமனை

இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், மூன்றாம் அலை கொரோனா குழந்தைகளை மட்டும் தாக்கும் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்பதற்கும் ஆதாரம் இல்லை.

இரண்டாம் அலை

இரண்டாம் அலை

இந்தியாவில் ஏற்பட்ட முதல் அலை, இரண்டாம் அலையை எடுத்துக்கொண்டாலும் சரி. உலகம் முழுக்க வந்த கொரோனா டேட்டாக்களை எடுத்துக்கொண்டாலும் சரி. எதிலும், எந்த வகையான கொரோனாவும் குழந்தைகளை அதிகம் பாதித்ததாக டேட்டா இல்லை.

Recommended Video

    Russia-வின் Sputnik Light Corona Vaccine எப்படி? | Single Dose Corona vaccine | Oneindia Tamil
     இம்யூனிட்டி

    இம்யூனிட்டி

    இந்தியாவில் இரண்டாம் அலை மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 60-70% பேருக்கு உடலில் ஏற்கனவே ஏதாவது நோய் இருந்திருக்கிறது. அல்லது இம்யூனிட்டி மிக குறைவாக இருந்திருக்கிறது. சில குழந்தைகள் கீமோ தெரபி சிகிச்சை எடுத்துள்ளனர். இவர்களை தவிர மற்ற குழந்தைகளை பெரிதாக பாதிக்கவில்லை.

    டிஸ்சார்ஜ்

    டிஸ்சார்ஜ்

    அப்படியே பாதிக்கப்பட்ட குழந்தைகள் கூட மருத்துவமனையில் சேராமல் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.

    இந்த வைரஸ் வேகமாக மாற்றம் அடைகிறது. இதனால் இதன் குணாதிசியங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் மூன்றாவது அலையில் குழந்தைகள்தான் அதிகம் பாதிப்படைவார்கள் என்பதற்கு சான்று எதுவும் இல்லை, என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

    English summary
    No evidence to show that the 3rd wave of Covid-19 will affect only children says AIMMS Director Dr Randeep Guleria.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X