டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் மேலும் இணையதள சேவைகள் முடக்கப்படுமா?.. உள்துறை அமைச்சகம் என்ன சொல்கிறது?

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி எல்லையில் இணையதள செயல்பாடுகள் மேலும் சில நாட்களுக்கு முடக்க தற்போது வரை எந்த திட்டமும் இல்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சிங்கு, டிக்ரி, காஸிப்பூர் ஆகிய 3 எல்லைகளில் இணைதள சேவைகள் துண்டிக்கப்பட்டன.

No Extension of internet ban at Delhi borders, says Home Ministry

கடந்த 29-ஆம் தேதி இரவு 11 மணி முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி இரவு 11 மணி வரை இணையதள சேவைகள் ரத்து செய்யப்பட்டன. நேற்று வரை இருந்த இந்த இணையதள துண்டிப்பு இரவு 11 மணிக்கு மேல் திரும்ப கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இணையதள சேவை துண்டிப்பு மேலும் சில நாட்களுக்கு துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் கூறுகையில் டெல்லி எல்லையில் தற்போதைய நிலவரப்படி இணையதள சேவைகள் துண்டிப்பு மேலும் நீட்டிக்கப்படாது என தெரிவித்தன.

இது என்ன புது வேஷம்.. எதற்காக இந்த முண்டாசு.. விளக்குகிறார் விஜயதாரணிஇது என்ன புது வேஷம்.. எதற்காக இந்த முண்டாசு.. விளக்குகிறார் விஜயதாரணி

டெல்லிக்குள் விவசாயிகள் வருவதை தடுக்கும் நோக்கில் சிமென்ட்டிலாலான தடுப்புச் சுவர்கள், பூமியில் ஆணிகளை புதைத்தல், முட்கள் கொண்ட வயர்களை வைத்து தடுப்பது உள்ளிட்ட செயல்களில் டெல்லி போலீஸ் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் கல்வீச்சை தடுக்கும் விதமாக டிக்ரி எல்லையில் பெரிய வலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

இந்த வலைகள் கோல்ப், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டு மைதானங்களில் பந்து வெளியே போகாமல் இருப்பதற்காக பயன்படுத்துவது ஆகும்.

English summary
Home Ministry says that No extension of internet ban at Delhi borders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X