பெங்களூர் ஈத்கா மைதானத்தில்.. விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்கு அனுமதியில்லை! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: பெங்களூர் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் சாம்ராஜ்பேட்டை பகுதியில் ஈத்கா மைதானம் அமைந்துள்ளது. அந்த மைதானத்தில் முஸ்லிம் சமூகத்தினர் ரம்ஜான், பக்ரீத் காலங்களில் சிறப்புத் தொழுகை நடத்துவார்கள்.
அந்த மைதானம் யாருக்குச் சொந்தம் என்பதில் கர்நாடக வக்பு வாரியத்திற்கும் பெங்களூர் மாநகராட்சிக்கும் இடையே மோதல் பிரச்சினை ஏற்பட்டது. இரு தரப்பும் தங்களுக்குத் தான் சொந்தம் எனச் சொல்கிறது.

வழக்கு
ஈக்தா மைதானம் கர்நாடக அரசின் வருவாய்த்துறைக்குச் சொந்தமானது என்று பெங்களூர் மாநகராட்சி கூறியது. இதன் காரணமாக அங்கு விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக வக்பு வாரியம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி மைதானத்தில் முன்பு இருந்த நிலையே தொடர உத்தரவிட்டார்.

விநாயகர் சதுர்த்தி
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. ஆன்மிக-கலாசார நிகழ்ச்சிகளை ஈத்கா மைதானத்தில் நடத்த அனுமதிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், இந்த நிகழ்ச்சிகளை அனுமதிப்பது குறித்து அரசு முடிவு எடுக்கலாம் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்குக் கர்நாடக அரசு அனுமதிக்க உள்ளதாகக் கூறப்பட்டது.

உத்தரவு
இதையடுத்து அங்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாடத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்பட்டது. ஆன்மீக நிகழ்ச்சிகள் தொடர்பாகக் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக வக்பு வாரியம் தலைமை நீதிபதி அமர்வில் வக்கீல் கபில்சிபல் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது.

உச்ச நீதிமன்றம்
ஈக்தா மைதானம் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்த வழக்கைக் கர்நாடக உயர்நீதி மன்றம் முடிவு செய்யும் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், மைதானத்தில் முன்பு இருந்த நிலையே தொடரும் என உத்தரவிட்டது. அதாவது மைதானத்தில் முன்பு ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், அதே நிலை தொடரும். இதனால் நாளை அங்கு நடைபெற இருந்த விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகள் நடைபெறாது.

வாதம்
முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் வக்பு வாரியத்தின் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, "சிறுபான்மை மதத்தினரின் உரிமைகளை இப்படி மிதிக்கலாம் என்ற எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டாம். அந்த மைதானத்தில் வேறு மதத்தினரின் நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. சட்டப்படி வக்பு சொத்தாகவும் கூட அது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் போது, திடீரென அந்த இடத்தில் பிரச்சினையைக் கிளப்பி, விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த விரும்புகிறார்கள்" என்றார்

பாபர் மசூதி
ஆனால் இது அரசால் நிர்வகிக்கப்படும் இடம் என்று குறிப்பிட்ட அரசின் வழக்கறிஞர், இரண்டு நாட்களுக்கு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், அங்கு நிரந்தரக் கட்டமைப்பு எதுவும் கட்டப்படாது என்றும் தெரிவித்தனர். அப்போது இடைமறித்த வக்பு வாரிய வழக்கறிஞர், "உபி-இல் பாபர் மசூதி விவகாரத்தில் அம்மாநில முதல்வர் உறுதி அளித்து இருந்தார். ஆனால் என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும்" என்று வாதிட்டார்.

200 ஆண்டுகள்
இதற்கு முன்பு மைதானத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளதா என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு, அரசு வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, "முன்பு இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடந்ததில்லை என்பதை அடிப்படையாக வைத்து எதிர்க்க முடியாது. கடந்த 200 ஆண்டுகளாக, நிலம் விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தப்பட்டது. அதேபோல அனைத்து வருவாயும் அரசின் பெயரில் உள்ளன" என்றார்.

உத்தரவு
அடுத்த ஆண்டு கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் காரணங்களுக்காகவே ஆன்மீக நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் வக்பு வாரிய வழக்கறிஞர் தெரிவித்தார். இதற்கிடையே வழக்கு விசாரணையை நாளை மறுநாள் ஒத்தி வைக்கவும் கர்நாடக அரசு கோரிக்கை விடுத்தது. இருப்பினும், அதை நிராகரித்த நீதிபதிகள், மைதானத்தில் முன்பு இருந்த நிலையே தொடர உத்தரவிட்டனர். இதனால் நாளை அங்கு நடைபெற இருந்த விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகள் நடைபெறாது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications