"கல்வியை வைத்து அரசியல் செய்யாதீர்கள்.." புதிய கல்வி கொள்கை.. முதல்வருக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்
டெல்லி: புதிய கல்வி கொள்கை தொடர்பாகத் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். அதில் புதிய கல்விக் கொள்கையில் எந்தவொரு மொழியும் திணிக்கப்படாது என்றும் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி கோரி முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையே இப்போது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அரசியல் வேண்டாம்
அதில் புதிய கல்விக் கொள்கையில் எந்தவொரு மாநிலத்திலும் எந்த மொழியையும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் மாணவர்கள் தாய் மொழியில் தரமான கல்வியைப் பெறுவதை புதிய கல்வி கொள்கை உறுதி செய்கிறது என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேலும், பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுள்ளன எனக் குறிப்பிட்டுள்ள தர்மேந்திர பிரதான், அரசியல் காரணங்களுக்காக மாணவர்களின் எதிர்காலத்தைப் பழி வாங்காதீர்கள் என்றும் தேசிய கல்விக் கொள்கையைக் குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது கடிதத்தில் மேலும், "நமது நாட்டின் கல்வி முறையின் எதிர்காலம் குறித்து ஆழ்ந்த பொறுப்புடன் இந்த கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன். நமது அடுத்த தலைமுறையினரின் தலைவிதியை வடிவமைக்கும் பொறுப்பில் உள்ள தலைவர்கள் என்பதால் இந்த விவகாரத்தில் மாநில அரசு அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 என்பது ஒரு சீர்திருத்தம் மட்டுமல்ல.. இது நமது மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைப் பாதுகாத்து வலுப்படுத்தும்.. மேலும், இந்தியாவின் கல்வி முறையை உலகத் தரத்திற்கு உயர்த்தவும் இது உதவுகிறது.
தமிழ் மொழி
கடந்த 2022 மே 26ம் தேதி சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, 'தமிழ் மொழி நிரந்தரமானது, தமிழ் கலாச்சாரம் உலகளாவியது. தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தைச் சர்வதேச அளவில் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுப்போம்' என்று கூறியிருந்தார். அதன்படி அவரது வழிகாட்டுதலின் கீழ், காசி தமிழ் சங்கமும், சௌராஷ்டிர தமிழ் சங்கமும் மத்திய அரசால் நடத்தப்பட்டது. 2022ஆம் ஆண்டு நடந்த காசி தமிழ் சங்கமத்தின் போது, 13 இந்திய மொழிகளில் திருக்குறள் நூலைப் பிரதமர் மோடி வெளியிட்டார். அடுத்தாண்டும் திருக்குறள் 15 மொழிகளில் வெளியிடப்பட்டது. தமிழ் இலக்கிய படைப்புகள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது.
மத்திய அரசு நடவடிக்கை
உலகின் பழமையான செம்மொழிகளில் ஒன்றாகவும், இந்தியாவிலேயே தொன்மையான மொழியாகவும் தமிழ் மொழி விளங்குவது நாட்டிற்கே பெருமைக்குரியது. சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், அனைத்து மாநிலங்களிலும் பாரதிய பாஷா உத்சவ் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த 15 கொண்டாட்டங்களில் கோடிக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கலந்துகொண்டனர். புகழ்பெற்ற நிறுவனங்களில் சுப்ரமணிய பாரதி இருக்கையை நிறுவுவதன் மூலம் தமிழ்நாட்டின் தனித்துவமான இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாட நடவடிக்கை எடுத்து வருகிறோம்..
தேசிய அளவிலும் உலக அளவிலும் தமிழை வளர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்த முயற்சிகள் சான்றாகும். அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் உள்ள அனைத்து இந்திய மொழிகளையும் நாட்டின் மொழியாகவே கருதுகிறோம். அதன்படி தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
தாய்மொழியில் கல்வி
ஒவ்வொரு மாணவரும் தங்கள் தாய்மொழியில் தரமான கல்வியைப் பெறுவதைத் தேசிய கல்விக் கொள்கை உறுதி செய்கிறது. தமிழ் மொழி என்பது வெறுமன பிராந்திய அடையாளம் இல்லை. அது தேசத்தின் பொக்கிஷமாகவே கருதுகிறோம். புதிய கல்விக் கொள்கையில் எந்த மாநிலத்திலும் எந்த மொழியையும் திணிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. உண்மையில், பல தலைமுறைகளாகக் கல்வியில் படிப்படியாக ஓரங்கட்டப்பட்ட தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளின் மூலம் மீண்டும் பாடங்களைக் கற்பிப்பதே எங்கள் நோக்கமாகும்.
மும்மொழி கொள்கை
1968 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் கல்விக் கட்டமைப்பின் முதுகெலும்பாக மும்மொழிக் கொள்கை இருக்கிறது. இவை கல்விக் கொள்கைகளின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், அது ஒருபோதும் முழு வீச்சில் அமல்படுத்தப்படவில்லை. இதனால் இது பள்ளிகளில் இந்திய மொழிகளை முறையாகக் கற்பித்தல் குறைந்தது. காலப்போக்கில், இது வெளிநாட்டு மொழிகளின் பயன்பாட்டை அதிகரித்தது. தமிழ் உட்பட ஒவ்வொரு இந்திய மொழியும் கல்வியில் உரிய இடத்தைப் பெறுவதை உறுதி செய்வதும் புதிய கல்வி கொள்கையின் நோக்கமாக உள்ளது.
தமிழ்நாடு எப்பொழுதும் சமூக மற்றும் கல்வித் துறையில் முன்னணியில் திகழ்ந்து வந்துள்ளது. இந்தியாவில் மிகவும் மாற்றத்தக்கச் சீர்திருத்தங்களில் சிலவற்றுக்கு முன்னோடியாகவும் உள்ளது. நவீன கல்வியை வடிவமைத்து, விளிம்புநிலை சமூகங்களை உயர்த்தி, அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய சூழலை உருவாக்குவதில் சிறப்பாக இருக்கிறது.
அரசியல் செய்ய வேண்டாம்
இருப்பினும், அரசியல் காரணங்களுக்காக புதிய கல்விக் கொள்கைக்குத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவிப்பது, தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களின் வாய்ப்புகளைப் பறிக்கிறது. மாநிலங்கள் தங்களுக்கு ஏற்ப கல்விக் கொள்கையை வடிவமைக்க இது அனுமதிக்கிறது. மேலும், சமக்ரா ஷிக்ஷா போன்ற திட்டங்கள் புதிய கல்விக் கொள்கை உடனேயே இணைக்கப்பட்டுள்ளன.
புதிய கல்விக் கொள்கையில் எந்த மொழியும் திணிக்கப்படாது. பல பாஜக அல்லாத மாநிலங்களும் இதை ஏற்றுள்ளன. எனவே, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் உயர்ந்து, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் உரிய முடிவெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications