டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வருமான வரி தாக்கல் செய்ய செப்.30 வரை காலக்கெடு நீட்டிப்பா? பரவும் தகவல்.. வருமான வரித்துறை விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு அக்டோபர் 31ம் தேதிதான், நாளை கடைசி நாள் என்றும், கூடுதல் கால அவகாசம் எதுவும் வழங்கப்படாது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் முந்தைய நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை ஜூலை 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31ம் தேதி முடிவடைந்ததது. ஆனால் மேலும் ஒரு மாத காலத்திற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

No more extension for filing IT returns

இந்த கூடுதல் அவசாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.

இதனையடுத்து வருமான வரித்துறை டுவிட்டர் மூலம் இன்று விளக்கம் அளித்துள்ளது. அதில், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல் போலியானது. எனவே, வரிசெலுத்துவோர் ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவான நாளைக்குள் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களை குறி வைக்கும் சிபிஐ.. சென்னை உட்பட 150 இடங்களில் ரெய்டு.. நடுக்கத்தில் அதிகாரிகள்அரசு அலுவலகங்களை குறி வைக்கும் சிபிஐ.. சென்னை உட்பட 150 இடங்களில் ரெய்டு.. நடுக்கத்தில் அதிகாரிகள்

ஒருவேளை வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் அவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்பதால், மக்களே உஷாராக வருமான வரி செலுத்தி விடுங்கள்.

English summary
It has come to the notice of CBDT that an order is being circulated on social media pertaining to extension of due dt for filing of IT Returns. It is categorically stated that the said order is not genuine.Taxpayers are advised to file Returns within extended due dt of 31.08.2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X