Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் காற்று மாசு பெரும் தலைவலியாக உள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் சூழலில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக சலுகை கொடுத்து வருகிறார்கள். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

நமது நாட்டில் காற்று மாசு என்பது மிகப் பெரிய தலைவலியாகவே இருக்கிறது. நாட்டின் முக்கிய நகரங்களில் ஏற்கனவே காற்றின் தரம் மிக மோசமான நிலைக்குப் போய்விட்டது. அதிலும் குறிப்பாக டெல்லியில் எல்லாம் ஒவ்வொரு குளிர் காலத்திலும் நிலைமை மிக மோசமாகவே இருக்கும். ஏர் பியூரிஃபையர் இல்லாமல் வாழவே முடியாது என்ற சூழலே இருக்கிறது.

No Petrol 2 Wheeler Registration in Delhi from 2028 What is Delhi EV Policy 2 0 Draft Explainer

காற்று மாசு

இதையடுத்து தேசிய தலைநகர் டெல்லியின் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 'வரைவு எலெக்ட்ரிக் வாகனக் கொள்கை 2026-2030' என்ற ஆவணத்தை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது. இதில் பெட்ரோல் பைக்குகள் மற்றும் ஆட்டோக்களுக்கு முழுமையாக தடை விதிப்பதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்து நாம் பார்க்கலாம்!

டெல்லி போக்குவரத்துத் துறையின் EV பிரிவு வெளியிட்டுள்ள இந்த வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் மற்றும் வல்லுநர்கள் அடுத்த 30 நாட்களுக்குக் கருத்து தெரிவிக்கலாம். குளிர்காலங்களில் ஏற்படும் கடும் புகைமூட்டத்தைக் குறைக்க, வாகனப் புகையை அறவே ஒழிக்க வேண்டும் என்பதில் டெல்லி அரசு உறுதியாக இருக்கிறது.

பெட்ரோல் வாகனங்களுக்குத் தடை

இந்தக் கொள்கையின் மிக முக்கியமான அம்சம், பெட்ரோல் வாகனங்களுக்கு விதிக்கப்படும் காலக்கெடுதான். ஜனவரி 1, 2027 முதல் டெல்லியில் புதிய ஆட்டோக்கள் பதிவு செய்ய வேண்டுமானால், அவை எலெக்ட்ரிக் வாகனங்களாக மட்டுமே இருக்க வேண்டும். பெட்ரோல் மட்டுமின்றி சிஎன்ஜி ஆட்டோக்களும் பதிவு செய்யப்படாது. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆட்டோக்களின் பெர்மிட் காலாவதியான பிறகு, அவை மீண்டும் புதுப்பிக்கப்படாது

இந்த கட்டுப்பாடு டூவீலர் உடன் நிற்கவில்லை. வரும் ஏப்ரல் 1, 2028 முதல் பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட உள்ளது. அதாவது ஏற்கனவே இருக்கும் டூவீலரை ஓட்டிக்கொள்ளலாம். ஆனால், புதிய டூவீலர்களை பதிவு செய்ய முடியாது.. 2028 முதல் எலெக்ட்ரிக் பைக்குகள் மட்டுமே புதிய பதிவுக்கு அனுமதிக்கப்படும்.

கடும் கட்டுப்பாடுகள்

ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் மற்றும் டாக்ஸி செயலிகளில் புதிய பெட்ரோல் வாகனங்களைச் சேர்க்கக் கூடாது.. ஏற்கனவே உள்ள டூவீலர் பெட்ரோல் வாகனங்கள் இந்தாண்டு இறுதி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் வாகனங்கள் மட்டுமல்லாமல், அரசு மற்றும் கல்வி நிறுவன வாகனங்களுக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் 30% பள்ளிப் பேருந்துகளை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அரசுத் துறைகளுக்குப் புதிதாக வாங்கப்படும் அனைத்து வாகனங்களும் 100% எலெக்ட்ரிக் வாகனங்களாகவே இருக்க வேண்டும் என வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சலுகைகள்

மேலும், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்களை ஊக்கப்படுத்தப் பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன:

  • வரி விலக்கு: ₹30 லட்சம் வரையிலான எலெக்ட்ரிக் கார்களுக்குச் சாலை வரி மற்றும் பதிவுத் துறைக் கட்டணத்திலிருந்து 100% விலக்கு அளிக்கப்படும்.
  • மானியம்: இருசக்கர வாகனங்களுக்குப் பேட்டரி திறனைப் பொறுத்து ₹10,000 முதல் ₹30,000 வரை மானியம் வழங்கப்படும். இது வரும் ஆண்டுகளில் படிப்படியாகக் குறைக்கப்படும். ஏற்கனவே முன்கூட்டியே வாங்குவோருக்கு அதிக சலுகை கிடைக்கும்.
  • பழைய வாகனங்கள்: பழைய பிஎஸ்-4 (BS-IV) மற்றும் அதற்குக் குறைவான தரம் கொண்ட வாகனங்களை Scrappageக்கு கொடுத்துவிட்டு. புதிய ஈவி வாங்கினால் ₹10,000 முதல் ₹1 லட்சம் வரை சலுகை கிடைக்கும்.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+