டெல்லியில் பழைய வாகனங்களுக்கு இம்மாத இறுதி முதல் பெட்ரோல் கிடையாது... கேமரா மூலம் சூப்பர் திட்டம்
டெல்லி: இந்தியாவில் காற்று மாசுவால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக தலைநகர் டெல்லி திகழ்கிறது. மற்ற ஊர்கள் எல்லாம் தூய்மையான தண்ணீருக்காகவும், நல்ல வசிப்பிடத்திற்காகவும், நல்ல வேலை வாய்ப்புக்காகவும் போராடுகின்றன. ஆனால் டெல்லி மட்டும் தூய்மையான காற்றுக்கே போராடும் நிலை இருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் விதமாக டெல்லியில் இந்த மாத இறுதியில் இருந்து பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்கப்படாது. பழைய வாகனங்களை கண்டறிய பெட்ரோல் பங்க்குகளில் நவீன கேமரா பொருத்தப்படுகிறது.
இந்தியாவின் தலைநகரான டெல்லி மாநகரம் உலகின் மாசுபட்ட நகரங்களில் முக்கியமான இடத்தில் உள்ளது. வளர்ச்சியை பெற டெல்லி மாநகரம் ஏற்கவே முடியாத அளவிற்கு இழப்பினை சந்தித்துள்ளது. டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளும் வளர்ச்சிக்காக ஏராளமான சுற்றுச்சூழல் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்தியாவில் அதிகமாக மக்கள் தொகை உள்ள நகரமாக உள்ள டெல்லியில் வாகனங்கள் எண்ணிக்கை மனிதர்கள் அளவிற்கு அதிகமாக இருக்கிறது.

டெல்லியில் மாசு
டெல்லியில் உள்ள வாகனங்கள் வெளியிடும் புகை, அண்டை மாநிலங்களில் உள்ள வயல்வெளி கழிவுகளை எரிப்பதால் உருவாகும் புகை மற்றும் கட்டிட பணிகளால் உருவாகும் மாசு போன்றவற்றால் டெல்லி அதிகமாக மாசடைந்து வருகிறது. டெல்லி மாநகரின் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.
டீசல் வாகனங்களுக்கு தடை
மாசு பிரச்சினையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் அம்மாநில அரசால் அடிக்கடி எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2014-ம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை நிறுத்துமாறு அறிவுரை கூறியது. இதனைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் இதில் இன்னும் முழுமையான தீர்வு காணப்படாத நிலை தொடர்கிறது.
பாஜக அரசு அதிரடி
இந்த நிலையில் டெல்லியில் புதிதாக பதவியேற்றுள்ள பாஜக அரசு, பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களை வழங்குவதில்லை என கடந்த மாதம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் சி.என்.ஜி. வாகனங்களை கண்டுபிடிப்பதற்காக பெட்ரோல் பங்க்குகளில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.
கேமரா பொருத்தும் பணி
ஏப்ரல் 1-ந் தேதி முதல் எரிபொருள் மறுக்கும் திட்டத்தை தொடங்க அரசு திட்டமிட்டது. ஆனால் குறித்த அந்த காலத்துக்குள் அதனை செயல்படுத்த முடியவில்லை. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி இன்னும் முடிவடையவில்லை என்பதுதான் காரணம். இந்த பணியை முழுமையாக முடித்து இந்த மாத இறுதியில் இருந்து பெட்ரோல், டீசல் வழங்க தடை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.
500 பெட்ரோல் நிலையங்கள்
டெல்லியில் மொத்தம் 500 பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி. நிலையங்கள் இருக்கின்றன. இவற்றில் 372 பெட்ரோல் பங்க்குகளிலும், 105 சி.என்.ஜி. நிலையங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலையங்களில் விரைவில் பொருத்தப்பட்டு விடும். அதன் பிறகு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எச்சரிக்கை ஒலி
பெட்ரோல் பங்க்குகளில் பொருத்தப்படும் கேமராக்கள் வாகனங்களின் பதிவு எண்ணை கொண்டு அவை எத்தனை ஆண்டுகள் பழமையானவை? என்பதை கண்டறியும் அதைப்போல அந்த வாகனத்துக்கு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் செயல்பாட்டில் உள்ளதா? என்பதையும் கண்டறியும். இந்த 2 விஷயங்களிலும் அந்த வாகனங்கள் உடன்படாமல் இருந்தால் கேமராக்கள் எச்சரிக்கை ஒலி எழுப்பும். இதனை அறிந்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அந்த வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க மறுப்பு தெரிவிப்பார்கள் என கூறப்படுகிறது.
அமைச்சர் விளக்கம்
இதுகுறித்து டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா கூறுகையில், "இந்த திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம் ஆகும். ஒரு பெட்ரோல் பங்க்கில் அதை செயல்படுத்தி, மற்றொரு பங்க்கில் செயல்படுத்தாவிட்டால் இந்த திட்டத்தால் என்ன பயன்? எனவேதான், அனைத்து இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்ட உடன் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்" என்றார்.
-
பெட்ரோல் விலை ரூ.5.30 வரை உயர்வு.. டீசல் ரூ.3 வரை அதிகரிப்பு.. இடியை இறக்கிய நயாரா நிறுவனம் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு.. எந்த நாட்டில் என்னென்ன கட்டுப்பாடுகள் .. முழு விவரம் -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
ஈரான் சொன்ன பாசிட்டிவ் நியூஸ்.. ஆனா பாருங்க இந்தியாவில் பதற்றம் குறையல! நேற்று குஜராத், இன்று அசாம்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications