மத்திய அரசு ஊழியர்களை முன்கூட்டியே ஓய்வுபெறச்செய்யும் திட்டம் உள்ளதா.. மத்திய அரசு விளக்கம்
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களை முன்கூட்டியே ஓய்வுபெறச்செய்யும் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என்று நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் எம்பிக்கள் கேள்வி நேரத்தின் போது கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த மத்திய அரசின் பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், மத்திய அரசு ஊழியர்களை முன்கூட்டியே ஓய்வுபெறச்செய்யும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று தெரிவித்தார்.
தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் தாமாக முன்வந்து ஓய்வு பெற அனுமதிக்கும் புதிய வழிகாட்டுதல் இடம் பெற்றுள்ளன. ஒரு மத்திய அரசு ஊழியர் இருபது ஆண்டுகள் வழக்கமான சேவையை முடித்த பிறகு, எந்த நேரத்திலும், நியமன அதிகாரிக்கு எழுத்துப்பூர்வமாக மூன்று மாதங்களுக்குக் குறையாமல் அறிவிப்பு கொடுத்து, பணியில் இருந்து ஓய்வு பெறலாம் என்று இருக்கிறது.

நியமன அதிகாரி மூன்று மாத காலத்திற்குள் ஓய்வு கோரிக்கையை நிராகரிக்கவில்லை என்றால், ஓய்வூதியம் அங்கீகரிக்கப்படும். முன்கூட்டியே தாங்களாக ஓய்வு பெற்றவர்கள் வழக்கமான ஓய்வு பெறும் வயதில் ஓய்வு பெறுபவர்களைப் போன்ற பலன்களைப் பெறத் தகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
முன்கூட்டியே ஓய்வு:
இந்த நிலையில் நாடாளுமன்ற ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின்போது, "மத்திய அரசு ஊழியர்களை முன்கூட்டியே ஓய்வுபெறச்செய்யும் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா? அதை அமல்படுத்தினால், ஊழியர்கள் மீது ஏற்படும் தாக்கம் என்ன?" என்று எம்பிக்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், "இல்லை. அப்படி ஒரு திட்டம் பரிசீலனையில் இல்லை. நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் ஊழியர்கள், முன்கூட்டியே ஓய்வுபெற அனுமதி கோரலாம்" என்று கூறினார்.
எஸ்சி எஸ்டி மத்திய அரசு பணியாளர்கள்:
இதனிடையே மத்திய அரசு பணியாளர்கள் தேர்வில் எஸ்சி எஸ்டி பிரதிநிதித்துவம் மற்றும் ஒபிசி பிரதிநிதித்துவம் தொடர்பான மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், "மத்திய அரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரதிநிதித்துவம் 15 சதவீதம் மற்றும் 7.5 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்ட அளவுப்படி நிரப்பப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்டோர் பிரதிநிதித்துவம் 27 சதவீதத்துக்கு மேல் உள்ளது.
மத்திய அரசு ஓபிசி பணியாளர்கள்:
கடந்த 2024 ஜனவரி 1-ந் தேதிப்படி, எஸ்.சி. சமுதாயத்தை சேர்ந்த 5 லட்சத்து 47 ஆயிரம் ஊழியர்களும், எஸ்.டி. சமுதாயத்தை சேர்ந்த 2 லட்சத்து 82 ஆயிரம் ஊழியர்களும், இதர பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தைர்ந்த 8 லட்சத்து 55 ஆயிரம் ஊழியர்களும் பணியாற்றி வருகிறார்கள். காலியிடங்களை நிரப்புவது தொடர்ச்சியான பணியாக நடந்து வருகிறது என்று கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications