ட்விஸ்ட் வைக்கும் தேர்தல் களம்.. பீகாரில் நிஜமாகவே வாக்கு சதவிகிதம் அதிகரித்ததா? உண்மை இதுதான்!
டெல்லி: பீகார் மாநிலத்தில் நேற்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 64.66% வாக்குகள் பீகாரில் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விஷயம் என்றாலும் கூட நாம் இன்னொரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். வாக்குப்பதிவு உண்மையில் அதிகரித்ததா இல்லையா என்ற கேள்விக்கான பதில் அதில் தான் இருக்கிறது.
பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு நிதிஷ் குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி, தேஜஸ்வி தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு இடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது. இதுபோக பிரசாந்த் கிஷோரின் ஜான் சுராஜ் கட்சியும் தனித்துக் களமிறங்குவதால் அங்கு மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

பீகார் வாக்குப்பதிவு
நேற்றைய தினம் அங்கு 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. பெரும்பாலும் பீகாரின் உள்மாவட்டங்களில் உள்ள தொகுதிகளிலேயே இதில் தேர்தல் நடந்தது. பீகார் துணை முதல்வர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது மட்டும் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. அதைத் தவிர மாநிலம் முழுக்க அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றது.
பீகாரில் நேற்றைய தினம் 64.66% வாக்குகள் பதிவாகியிருந்தது. பீகார் மாநிலத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் இவ்வளவு அதிகமாக வாக்குகள் பதிவானதே இல்லை. கடந்த 2000ம் ஆண்டு நடந்த பீகார் சட்டசபைத் தேர்தலில் அங்கு அதிகபட்சமாக 62.57% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், அதை விட அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாகப் பலரும் கூறுகிறார்கள். இது வரவேற்கத்தக்க ஒன்று எனப் பலரும் கொண்டாடி வருகிறார்கள்.
எவ்வளவு வாக்குகள்
கடந்த 2020 சட்டசபைத் தேர்தலில் முதலாம் கட்டத்தில் 57.29% வாக்குகள் பதிவாகி இருந்தது. அப்போது பீகாரில் மொத்தம் 7.36 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அப்போது அங்கு மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்ற நிலையில், மொத்தம் 4.2 கோடி வாக்குகள் பதிவானது. எனவே, அதை விட இந்த முறை வாக்குப்பதிவு கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
பொதுவாகவே ஆளும் தரப்பிற்கு எதிரான மனநிலை மக்களிடையே அதிகமாக இருந்தால் தான் வாக்குப்பதிவு அதிகரிக்கும். இதனால் அங்கு வாக்கு சதவிகிதம் பெரியளவில் அதிகரித்துள்ளது ஆட்சி மாற்றத்தையே காட்டுவதாகச் சிலர் குறிப்பிடுகிறார்கள்.
கவனிக்க வேண்டியது
இருப்பினும், இங்கு நாம் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது பீகாரில் தேர்தலுக்கு முன்பு தான் SIR எனப்படும் வாக்காளர் தீவிரச் சிறப்புச் சீர்திருத்தம் நடைபெற்றது. இந்த சார் பணிகளில் பல்வேறு காரணங்களால் கணிசமான அளவுக்கு வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதாவது சார் நடவடிக்கைக்கு முன்பு அங்கு 7.89 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இருப்பினும், சார் பணிகளுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை 7.42 கோடியாகக் குறைந்தது. அதாவது 47 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
அதாவது சார் பணிகளில் 5.96% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எனவே, அதையும் சேர்த்துப் பார்த்தால் இந்த முறை வாக்குப்பதிவு பலரும் சொல்வதைப் போல மிகப் பெரியளவு எல்லாம் அதிகரிக்கவில்லை. வாக்காளர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதால் வாக்குப்பதிவு இன்னுமே அதிகரித்திருக்க வேண்டும்.
எவ்வளவு அதிகரிப்பு?
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பீகாரில் சார் பணிகள் காரணமாகக் கிட்டத்தட்ட 6% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எனவே, வாக்குப்பதிவு விகிதமாகப் பார்க்கும்போது கணிசமாக அதிகரித்திருப்பது போலத் தோன்றினாலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் அது பெரியளவில் அதிகரிக்கவில்லை என்பது போலவே தெரிகிறது. எனவே, ஆட்சிக்கு எதிரான மனநிலை என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.!
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications