டோட்டல் ஃபெயிலியர்.. பீகாரில் ராகுல் காந்தி யாத்திரை போன ரூட் எல்லாம் காங்கிரஸ் அவுட்!
டெல்லி: பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி யாத்திரை நடத்திய தொகுதிகள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது. ராகுல் பயணம் செய்த ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லை.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வாக்குத் திருட்டு விவகாரத்தைக் கையிலெடுத்து, பீகாரில் வாக்காளர் அதிகார பயணம் மேற்கொண்ட பகுதிகளில் உள்ள தொகுதிகளில் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்திருப்பது இன்றைய தேர்தல் முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே தேசிய ஜனநாயக கூட்டணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் தேர்தலை சந்தித்த ஆர்ஜேடி - காங்கிரஸ் கட்சியின் மகாகட்பந்தன் கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இன்று மாலை 5 மணி நிலவரப்படி என்டிஏ கூட்டணி 204 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மகாகத்பந்தன் கூட்டணி 34 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே தற்போது முன்னிலையில் உள்ளது.
பல்வேறு மாநிலங்களிலும் மத்தியில் ஆளும் பாஜகவுடன் தேர்தல் ஆணையம் இணைந்து வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டி வந்தார். அந்தவகையில் பீகார் மாநிலத்தில் ராகுல் காந்தி, வாக்காளர் அதிகார யாத்திரையை மேற்கொண்டிருந்தார். அதாவது பீகாரின் சசராமில் தொடங்கி 25 மாவட்டங்கள், 110 சட்டசபை தொகுதிகள் வழியாக 1300 கி.மீ தூரம் பயணித்து பாட்னாவில் நிறைவு செய்தார்.
ராகுல் காந்தி பயணித்த இந்த தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட, காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கிஷண்கஞ்ச், மணிஹாரி, பெகுசராய், வால்மீகி நகர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் மட்டுமே 5 மணி நிலவரப்படி முன்னிலை வகித்து வருகிறது.
2024 மக்களவைத் தேர்தல்களிலும் 2023 தெலுங்கானா தேர்தல்களிலும் ராகுல் காந்தியின் யாத்திரைகள் சிறப்பான வெற்றியைப் பெற உதவியதாக காங்கிரஸ் கட்சி நம்பியது. 2022 மற்றும் 2024 க்கு இடையில் காந்தி மேற்கொண்ட 2 அகில இந்திய பாரத் ஜோடோ யாத்திரைகளைத் தொடர்ந்து காங்கிரஸ் 41 இடங்களை வெல்ல முடிந்தது. தெலுங்கானாவில், காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
ஆனால் தற்போது பீகாரில் ராகுல் காந்தி மேஜிக் வொர்க் அவுட் ஆகவில்லை. பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி சுமத்திய "வாக்கு திருட்டு" குற்றச்சாட்டு வாக்காளர்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதை பீகார் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications