போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு.. "அக்னிபாத்தில் நோ சான்ஸ்".. ராணுவ விவகாரங்கள் துறை திட்டம்!
டெல்லி: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டால் ராணுவத்தில் சேர முடியாது என்று ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் புரி தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், அக்னிபாத் என்ற புதிய திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. 4 ஆண்டுகள் ஒப்பந்தம் அடிப்படையில் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் இளைஞர்கள், அதன் பின்னர் சுமார் ரூ.11 லட்சம் ஊதியத்துடன் வீட்டுற்கு அனுப்பப்படுவர். இதன்மூலம் ஓய்வூதியம் இல்லாமல் இளைஞர்கள் பணியில் இருந்து வெளிவருவர். இதற்கு 17 வயது முதல் 21 வயது உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஒரு சில பகுதிகளில் வன்முறை ஏற்பட்டு, ரயில்களுக்கு தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறின. ரயில்வே துறைக்கு ரூ.200 கோடிக்கும் அதிகமாக சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்தநிலையில் இளைஞர்களை கட்டுப்படுத்தும் விதமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய ராணுவத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை. அக்னிபாத் மூலம் ராணுவத்தில் சேருபவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ராணுவத்தில் சேர ஒழுக்கம் மிக அவசியம். தீ வைப்பு போன்ற நாசவேலைகளில் ஈடுபடுவோருக்கு இந்திய ராணுவத்தில் இடமில்லை. வன்முறையில் ஈடுபட்டு பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவோர் ராணுவத்தில் சேர முடியாது. ஒவ்வொரு விண்ணப்பமும் காவல்துறை மூலம் சரிபார்க்கப்படும். நாசவேலைகளில் ஏதும் ஈடுபடவில்லை என காவல்துறை சான்று பெற்றுத் தந்தால் மட்டுமே ராணுவத்தில் இடம் கிடைக்கும். அக்னிபாத் திட்டத்தால் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் முப்படையில் சேர வாய்ப்பு உள்ளது.
முப்படைகளுக்கான இந்த சீர்த்திருத்தம் நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது. ராணுவத்தில் அனுபத்துடன், இளைஞர்களை இணைத்து இளமையாக வைக்க விரும்புகிறோம். முப்படைகளில் இளைஞர்களின் பங்கை அதிகரிக்கவே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளாது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் அக்னி வீரர்களுக்கு, இந்திய ராணுவ வீரர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். ஒருவேளை அக்னி வீரர்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தால் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும். ற்போது திட்ட ஆய்வுக்காக 46 ஆயிரம் வீரர்கள் பணியில் சேர்க்கப்பட உள்ளனர். அடுத்த 5 முதல் 5 ஆண்டுகள் ஆள்சேர்ப்பை 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை அதிகரிக்கப்படும்.
எதிர்காலத்தில் அக்னிவீரர்கள் ஆள்சேர்ப்பு 1.25 லட்சமாக உயரும். ஒவ்வொரு ஆண்டும் முப்படைகளில் இருந்து சுமார் 17 ஆயிரத்து 600 பேர் முன்கூட்டியே ஓய்வு பெறுகின்றனர். ஓய்வு பிறகு என்ன செய்ய போகிறீர்கள் என இதுவரை யாரும் யாரிடமும் கேட்க முயன்றது இல்லை என்று தெரிவித்தார்.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications