"சின்ன ஆதாரம் கூட கொடுக்கவில்லை".. கனடா ட்ரூடோவை வளைத்த இந்தியா.. வெளியுறவுத்துறை பரபர அட்டாக்!
டெல்லி: கனடா குற்றச்சாட்டு தொடர்பாக எந்த ஆதாரத்தையும் எங்களிடம் வழங்கவில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது. ட்ரூடோ குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக எதுவும் எங்களிடம் கொடுக்கப்படவில்லை, ஆதாரம் ஏதேனும் கொடுக்கும் பட்சத்தில் இதில் விசாரணை செய்ய தயாராக இருக்கிறோம் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரை இந்திய அரசு கொன்றது என்று ட்ரூடோ குற்றச்சாட்டு வைத்து உள்ளதால் இரண்டு நாட்டு உறவு முறியும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் தேடப்பட்டு வந்த நிஜ்ஜார், ஜூன் 18 அன்று, கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1990-களின் பிற்பகுதியில் கனடாவுக்குச் சென்ற நிஜ்ஜார், 2020-ல் இந்தியாவால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். கனடா, பிரதமர் ட்ரூடோ, இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கியமாக காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
.கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது நமது இறையாண்மையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம்.
இந்தியா இது தொடர்பான விசாரணையில் ஒத்துழைக்க வேண்டும். இதில் உண்மையை கொண்டு வர வேண்டும். நாங்கள் இது பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம். இதனால் இந்தியா கனடா இடையிலான உறவு முறியும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. னடா குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம் மற்றும் மறுப்பு வெளியிட்டு உள்ளது.
வெளியேற்றம்: இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான கனடா பிரதமர் ட்ரூடோவின் கருத்துக்களைத் தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரி பவன் குமார் ராயை கனடா வெளியேற்றியதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முதல்முறையாக கனடா இந்தியாவின் வெளியுறவுத்துறை தூதரக அதிகாரியை இப்படி வெளியேற்றி உள்ளது.
இதனால் இரண்டு நாட்டு உறவு முறியும் அபாயம் உள்ளது. இதனால் இந்தியாவும் கனடாவின் வெளியுறவுத்துறை தூதரக அதிகாரியை வெளியேற்றி உள்ளது.

ஆதாரம் இல்லை: இந்த நிலையில்தான் : கனடா குற்றச்சாட்டு தொடர்பாக எந்த ஆதாரத்தையும் எங்களிடம் வழங்கவில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.
ட்ரூடோ குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக எதுவும் எங்களிடம் கொடுக்கப்படவில்லை, ஆதாரம் ஏதேனும் கொடுக்கும் பட்சத்தில் இதில் விசாரணை செய்ய தயாராக இருக்கிறோம். இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆதாரம் தந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும், என்று இந்தியா தெரிவித்துள்ளது.
உளவு பார்த்தா?: இந்தியாவிற்கு எதிரான கனடா பிரதமர் ட்ரூடோவின் குற்றச்சாட்டிற்கு பின் கனடா இந்திய அதிகாரிகளை உளவு பார்த்து இருக்கலாம் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. கனடா உளவு பார்த்து அதன் மூலம்ஸ் சேகரித்த உளவு தகவல்களின் அடிப்படையில்தான் இந்தியாவை குற்றஞ்சாட்டுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் ரா அதிகாரி பவன் குமார் ராய் உள்ளிட்டோரை கனடா உளவு பார்த்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
காலிஸ்தானியுடன் தொடர்புடைய தீவிரவாதத் தலைவரைக் கொன்றதில் இந்தியாவின் பங்கு பற்றிய கனடாவில் குற்றச்சாட்டு உளவு அடிப்படையிலானது என்கிறார்கள். கனடாவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளை உளவு பார்த்து கனடா சில தகவல்களை திரட்டி இருக்கலாம் என்று AP செய்தி நிறுவனம் கூறியுள்ளது. முக்கியமாக கனடாவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளை நேரடியாக உளவு பார்த்து, அவர்களின் போன்களை டேப் செய்து, இந்த புகார்களை கனடா வைக்கலாம் என்று அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications