டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊகங்களுக்கு இடமே இல்லை...மோசமான பொருளாதாரம்... சிதம்பரம் ட்வீட்!!

Google Oneindia Tamil News

டெல்லி: ஜி 20 நாடுகளிலேயே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திதான் மிகவும் மோசமான நிலையில் கடந்த ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் இருந்து இருக்கிறது என்று சர்வதேச அந்நிய செலாவணி நிதியம் தெரிவித்து இருப்பதை மேற்கோள்காட்டி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் ட்வீட் பதிவு செய்துள்ளார்.

Recommended Video

    GDP Explained In Tamil | Oneindia Tamil

    சர்வதேச அந்நிய செலாவணி நிதியத்தின் தலைவர் கீதா கோபிநாத் இதுகுறித்த ட்விட்டர் பதிவை ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில், ஜி 20 நாடுகளிலேயே இந்தியாவின் பொருளாதாரம்தான் 2020ஆம் ஆண்டில் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு குறைவாக -25.6% என்ற அளவில் சரிந்துள்ளது. இந்த ஆண்டில் பொருளாதாரம் பழைய நிலைக்கு வரும் என்று எதிர்பார்த்தாலும், ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது வளர்ச்சி இருக்காது என்றே தோன்றுகிறது. முதல் காலாண்டில் சரிந்த சீனாவின் பொருளாதாரம் இரண்டாம் காலாண்டில் வளர்ச்சி பெற்றுள்ளது'' என்று பதிவிட்டுள்ளார்.

    No speculation; We are the worst performing economy in the April-June quarter says P. Chidambaram

    ஜி 20 அமைப்பில் இடம் பெற்று இருக்கும் நாடுகளின் வளர்ச்சியை வைத்து ஒரு கிராப் வெளியிட்டு இதற்கு கீதா கோபிநாத் விளக்கம் அளித்துள்ளார். இதில், இந்தியாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சரிவில் பிரிட்டன் இருக்கிறது. அந்த நாட்டின் பொருளாதாரம் நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் 20.4% என்ற அளவில் சரிந்துள்ளது. சீனாவின் பொருளாதாரம் 12.3 என்ற அளவில் மார்ச் மாதத்துக்கு பின்னர் விரிவடைந்துள்ளது.

    No speculation; We are the worst performing economy in the April-June quarter says P. Chidambaram

    இவர் பகிர்ந்த கிராப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், ''இந்த கிராப்பை சர்வதேச அந்நிய செலாவணி நிதியம் வெளியிட்டுள்ளது. எந்த ஊகங்களுக்கும் இங்கே இனி இடமில்லை. கடந்த ஏப்ரல்-ஜூன் மாத காலாண்டில் நமது பொருளாதாரம்தான் மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

    No speculation; We are the worst performing economy in the April-June quarter says P. Chidambaram
    English summary
    No speculation; We are the worst performing economy in the April-June quarter says P. Chidambaram
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X