லேடீஸ் பாத்ரூமில்.. கதவே இல்லையாமே.. அதுவும் ஒரே ரூமில் 3 பேரா?.. பகீரை கிளப்பும் திகார் ஜெயில்
டெல்லி திகார் சிறையில் பெண்கள் கழிப்பறைகளுக்கு கதவு இல்லையாம்
டெல்லி: லேடீஸ் பாத்ரூமில் கதவே இல்லையாமே.. அதுவும் திகார் ஜெயிலில் பெண் கைதிகளுக்கான பாத்ரூம்களில் கதவுகள் இல்லை என்ற விஷயம் தற்போது வெடித்து கிளம்பி உள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல, தெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய ஜெயில் திகார் தான்.. மொத்தம் 3 கிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் உள்ளது.. 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இங்கு 10 ஆயிரம் பேர்களை அடைத்து வைக்கலாம்.. ஆனால, இப்போது டபுள் ஆகி அதாவது 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அங்கே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆய்வு
இந்நிலையில் தான் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் வெளிவந்துள்ளது.. டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால்.. இவர் வழக்கம்போல திகார் சிறையில் பெண்கள் சிறைச்சாலையை தனது குழுவினருடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்... அப்போதுதான் பெண் கைதிகள் நிறைய பேர், சொல்ல முடியாத சிரமத்துக்கு அங்கு ஆளாகி இருப்பதை கண்ணெதிரே கண்டார்.

பாத்ரூம்
ஒரே ரூமில் 3 பேரை அடைத்து வைத்திருந்துள்ளனர்.. அங்கிருந்த பாத்ரூமுக்கு கதவு இல்லையாம்.. அதுக்கு சுற்றுசுவர்கூட இல்லையாம்.. அப்படியே ஓபனாகவே இருந்துள்ளது. ஒரே ரூமுக்குள் 3 பேர் + கதவில்லாத பாத்ரூம் என்ற நிலைமை அங்கு நீண்ட நாட்களாகவே இருந்திருக்கிறது.

ஜெயில்
இதை பார்த்து அதிர்ந்து போன சுவாமி மாலிவால், இது மனிதாபிமானமற்ற செயல் என்று அங்கேயே கண்டித்தார்.. உடனே அதையெல்லாம் சரி செய்யுமாறு, சிறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்... அதுமட்டுமல்ல, ஜெயிலில் வேலை பார்த்து கூலி பெறும் கைதிகளிடம் பராமரிப்பு கட்டணம் எதுவும் வசூலிக்க கூடாது, அல்லது கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

விசாரணை
இந்த சிறையிலேயே பெண் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை அரசுத்துறைகள் மற்றும் ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் பரிந்துரை செய்தார்.. நாட்டிலேயே மிகப்பெரிய ஜெயில் என பெயர் பெற்ற சிறையில், பெண்கள் அறை பாத்ரூமில் கதவுகள் இல்லாத விவகாரம் அதிர்ச்சியை கூட்டி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications