முதல் 20 கிமீ-க்கு டோல் கட்டணம் கிடையாது.. வாகன ஓட்டிகளுக்கு மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்
டெல்லி: சுங்கச்சாவடிகளில்(டோல்கேட்) ஜிஎன்எஸ்எஸ் எனும் சேட்டிலைட் முறையில் டோல்கேட் கட்டணம் செலுத்துவதில் ஒரு நாளில் ,முதல் 20 கிலோமீட்டர் தொலைவுகளுக்கு பொதுமக்களுக்கு டோல்கட்டணம் என்பது கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் (டோல்கேட்) அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் என்பது தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் பணம் ஆகியவற்றின் மூலம் டோல் கட்டணம் செலுத்தும் முறை இருந்தது.

இதற்கு அதிக நேரம் பிடித்தது. இதனால் வாகனங்கள் டோல்கேட்டுகளில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அதன்பிறகு பாஸ்டேக் முறை அமலுக்கு வந்தது. பாஸ்டேக் மூலம் நேரடியாக வங்கி கணக்குகளில் இருந்து டோல் கட்டணம் எடுக்கப்பட்டதால் வரிசையில் வாகனங்கள் நிற்கும் நேரம் குறைந்தது.
இந்நிலையில் தான் தற்போது புதிய டோல்கேட்டில் கட்டணம் செலுத்தும் முறையில் புதிய நடைமுறையை மத்திய சாலை போக்குவரத்து துறை கொண்டு வந்துள்ளது. ஜிஎன்எஸ்எஸ் (GNSS)அல்லது Global Naviagation Satellite System முறையில் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு வர உள்ளது.
அதாவது வாகனங்களில் ஆன் போர்ட் யூனிட் (On - Board Unit) எனும் ஓபிசி கருவி பொருத்தப்படும். இந்த கருவி பொருத்தப்படும் வாகனங்கள் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் சேட்டிலைட்டுடன் இணைக்கப்படும். இதன்மூலம் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தொலைவு என்பது கணக்கிட்டு டோல்கேட்டில் உள்ள ஸ்கேனர் மூலம் நேரடியாக பணம் என்பது எடுத்து கொள்ளப்படும்.
இதற்காக ஜிஎன்எஸ்எஸ் திட்டத்துக்காக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் தேசிய நெடுஞ்சாலை கட்டணம் விதிகள் (Determination of Rates and Collection) 2008 -ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த விதியின் 6வது பிரிவின்படி இந்த ஜிஎன்எஸ்எஸ் வாகனங்களுக்காக டோல்கேட்டுகளில் தனியாக வழிப்பாதை வழங்க வழி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வாகனங்கள் விரைவாக செல்ல முடியும்.
முதலில் இந்த திட்டம் என்பது தேசிய நெடுஞ்சாலை, எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட சில டோல்கேட்டுகளிலும் அமலுக்கு வர உள்ளது. அதன்பிறகு படிப்படியாக அனைத்து டோல்கேட்டுகளுக்கும் கொண்டு வரப்பட உள்ளது. இந்நிலையில் தான் ஜிஎன்எஸ்எஸ் முறை அமலுக்கு வரும் பட்சத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் முதல் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‛‛தேசிய அனுமதி பெறாத (National Permit Vehicle) வாகனங்கள் தவிர பிற வாகனங்களின் ஓட்டுநர், உரிமையாளர்களுக்கு பயண நாளின் முதல் 20 கிலோமீட்டர் பயணத்துக்கு டோல் கட்டணம் என்பது என்பது வசூலிக்கப்படாது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சோதனை அடிப்படையில் சில இடங்களில் இந்த முறை உள்ள இடங்களில் இந்த நடைமுறை என்பது நேற்று முதல் அமலாகி உள்ளது.
இதன்மூலம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகளில் முதல் 20 கிலோமீட்டரை கழித்து தான் வாகனங்களுக்கான டோல் கட்டணம் என்பது சேட்டிலைட் முறையில் வசூல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக டோல்கேட்டுகளில் சில கட்டண சலுகைகள் என்பது நடைமுறையில் உள்ளது. அதாவது உயர் பதவிகளில் உள்ளவர்கள், அரசின் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள், ராணுவ வாகனங்களுக்கு டோல் கட்டணம் என்பது செலுத்த தேவையில்லை.
அந்த வகையில் தற்போது சேட்டிலைட் முறையிலும் அனைத்து தரப்பு மக்களும் பயண நாளின் முதல் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு டோல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் டோல்கேட்டையொட்டி பகுதிகளில் முதல் 20 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் மக்கள் பயன்பெற உள்ளனர். அதேபோல் பிற வாகன ஓட்டிகளும் பயண நாளில் முதல் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications