Voter ID இல்லாவிட்டாலும் இந்த 12 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம்! ஆனால் ஒன்று..!
டெல்லி: வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை கையில் இல்லாதவர்கள், தேர்தலின் போது தங்களின் அடையாளத்தை நிரூபிக்க 12 விதமான மாற்றுப் புகைப்பட அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதியாகும். இந்த நிலையில் வாக்களிக்க அனுமதிக்கப்படும் ஆவணங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

வாக்களிக்க அனுமதிக்கப்படும் 12 மாற்று ஆவணங்கள்
வாக்காளர் அடையாள அட்டை இல்லாத பட்சத்தில், கீழே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு அசல் ஆவணத்தைக் காண்பித்து வாக்களிக்கலாம்:
- ஆதார் கார்டு (Aadhaar Card)
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பணி அட்டை
- வங்கி அல்லது அஞ்சலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகங்கள் (Passbooks)
- தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு ஸ்மார்ட் கார்டு (Health Insurance Smart Card)
- ஓட்டுநர் உரிமம் (Driving License)
- பான் கார்டு (PAN Card)
- தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் (NPR) கீழ் இந்தியப் பதிவாளர் ஜெனரலால் (RGI) வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு
- இந்திய கடவுச்சீட்டு (Indian Passport)
- புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் (Pension Document)
- மத்திய/மாநில அரசுகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சேவை அடையாள அட்டைகள்
- நாடாளுமன்ற உறுப்பினர்கள்/சட்டமன்ற உறுப்பினர்கள்/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள்
- மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தனித்துவமான மாற்றுத்திறனாளி அடையாள அட்டை (UDID Card)
வாக்களிக்கச் செல்லும் நபர் மேற்கண்ட ஆவணங்களை வைத்திருந்தாலும், அவருடைய பெயர் அந்தத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது கட்டாயம். பெயர் பட்டியலில் இருந்தால் மட்டுமே இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்க முடியும்.
பெண்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள்
பர்தா அணியும் பெண்கள் மற்றும் முக்காடு அணியும் பெண்களின் அடையாளத்தைச் சரிபார்க்க, வாக்குச் சாவடிகளில் பெண் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் தனிப்பட்ட இட வசதி மற்றும் கண்ணியமான முறையில் சரிபார்ப்பு நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications