டோல்கேட்டில் UPI பயன்படுத்தினால் கட்டண சலுகை! FASTag இல்லாதவர்களுக்கு குட்நியூஸ்.. நவ.15ல் அமல்
டெல்லி: டோல்கேட்டில் பாஸ்டேக்கில் (FAStag) பணம் செலுத்த முடியாதவர்கள் கையில் பணம் கொடுப்பதை விட யுபிஐ செயலிகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்தால் இரண்டு மடங்கு கட்டணத்துக்கு பதில் வெறும் 1.25 மடங்கு கட்டணத்தை மட்டுமே செலுத்தினால் போதும். இந்த புதிய நடைமுறை நவம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு பணிக்காக வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே டோல்கேட்டுகள் அமைக்கப்பட்டு இந்த சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டோல்கேட்டுகளில் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் வாகன ஓட்டிகள் பாஸ்டேக்கை (FASTag) பயன்படுத்தி வருகின்றனர்.

டோல்கேட்டில் இருக்கும் கேமரா, இந்த பாஸ்டேக்கை ‛ஸ்கேன்' செய்து சரியான கட்டணத்தை எடுத்து கொள்ளும். இதனால் வாகனங்கள் சுங்கக்கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் நிற்க தேவையில்லை. இதனால் டோல்கேட்டில் வாகன நெரிசல் குறைந்துள்ளது.
நம் நாட்டில் உள்ள டோல்கேட்டுகளை கடக்கும் வாகனங்களில் தற்போது 98 சதவீதம் வரை பாஸ்டேக் பயன்பாடு வந்துவிட்டது. இருப்பினும் 2 சதவீத வாகன ஓட்டிகள் இன்னும் கூட டோல்கேட்டில் பணம் கொடுத்து செல்கின்றனர். இப்படி செய்யும்போது அவர்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். ஏனென்றால் பாஸ்டேக்கை பயன்படுத்தாமல் கட்டணம் செலுத்தும்போது இருமடங்கு வசூலிக்கப்படும். உதாரணமாக பாஸ்டேக்கில் டோல் கட்டணம் ரூ.100 வசூலிக்கப்பட்டால் கையில் பணம் கொடுக்கும்போது இருமடங்காக ரூ.200 செலுத்த வேண்டும்.
இதனால் பாஸ்டேக் பயன்படுத்தாதவர்களும், பாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்யாதவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாஸ்டேக் பயன்பாட்டை முழுவதுமாக கொண்டு வரும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் தான் இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதாவது இனி பாஸ்டேக் பயன்படுத்தாத வாகன ஓட்டிகள் கையில் பணம் கொடுப்பதற்கு பதில் யுபிஐ செயலிகள் மூலமாக பணம் செலுத்தினால் கட்டண சலுகை வழங்கப்பட உள்ளது. டோல்கேட்டில் கையில் பணம் கொடுப்பதை தவிர்க்கும் வகையிலும், பாஸ்டேக்கிற்கு அப்பாற்பட்டு யுபிஐ பணவர்த்தனையை அதிகரிக்கும் வகையில் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக அரசு தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) விதிகள், 2008 -ல் திருத்தம் செய்துள்ளது. அதன்படி பாஸ்டேக் இல்லாதவர்கள் UPI செயலிகள் வழியாக சுங்கக் கட்டணத்தைச் செலுத்தும்போது 2 மடங்கு கட்டணத்துக்கு பதில் 1.25 மடங்கு மட்டுமே செலுத்தினால் போதும்.
உதாரணமாக ஒருடோல்கேட்டில் சுங்கக்கட்டணம் ரூ.100 வருகிறது என்று வைத்து கொள்வோம். இதனை பாஸ்டேக்கில் செலுத்தினால் ரூ.100 மட்டுமே போதும். ஆனால் கையில் பணமாக கொடுத்தால் 2 மடங்கு கட்டணமாக ரூ.200 கொடுக்க வேண்டும். இப்போது இந்த கட்டணத்தில் தான் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது கையில் பணம் கொடுப்பதற்கு பதில் யுபிஐ செயலி மூலமாக பணம் செலுத்தினால் 2 மடங்கிற்கு பதில் 1.25 மடங்காக ரூ.125 செலுத்தினால் போதும்.
இந்த புதிய கட்டண சலுகை நவம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதுதொடர்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறை இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பாஸ்டேக்கை பயன்படுத்தாமல் உள்ள வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸாக பார்க்கப்படுகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications