இந்தியாவில் புகுந்த புதிய வகை "ஓமிக்ரான் XE".. எந்தளவு ஆபத்தானது? விளக்குகிறார் டாப் ஆய்வாளர் அரோரா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் ஓமிக்ரான் XE பரவ தொடங்கி உள்ள நிலையில், இது குறித்து தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் என்.கே. அரோரா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கடந்த 2019 இறுதியில் முதலில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதன் பின்னர் உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த கொரோனா மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், அதைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாகவே உள்ளது

சீனா

சீனா

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா முதல் அலையை ஏற்படுத்தியது என்றால், அதன் பின்னர் ஆல்பா, டெல்டா மற்றும் ஓமிக்ரான் ஆகிய உருமாறிய கொரோனா வகைகள் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தின. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா உலகெங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோல உலகின் பல நாடுகளிலும் டெல்டா கொரோனா மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.

 புதிய வகை ஓமிக்ரான்

புதிய வகை ஓமிக்ரான்

அதேநேரம் கடைசி அலையை ஏற்படுத்திய ஓமிக்ரான் கொரோனா பெரும்பாலும் லேசான பாதிப்பையே ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இதனால் வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்த போதிலும், தீவிர பாதிப்பும் உயிரிழப்பும் குறைவாகவே இருந்தது. இந்தச் சூழலில் உலக சுகாதார அமைப்பு XE என்ற புதிய வகை கொரோனா குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ஒமிக்ரான் BA.2 வகையை விட சுமார் பத்து சதவீதம் வேகமாகப் பரவும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

 ஹைபிரிட் வேரியண்ட்

ஹைபிரிட் வேரியண்ட்

இந்த புதிய XE உருமாறிய கொரோனா என்பது BA.1 மற்றும் BA.2 ஆகிய இரண்டு உருமாறிய கொரோனாவின் ஹைபிரிட் வேரியண்ட் ஆகும். இந்த புதிய வகை ஓமிக்ரான் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது. இதற்கிடையே மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களிலும் சிலருக்கு இந்த புதிய ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து, இப்போது தான் இயல்பு நிலை மெல்லத் திரும்பு நிலையில், இத்தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 முக்கிய தகவல்

முக்கிய தகவல்

இந்நிலையில், புதிய XE வகை ஓமிக்ரான் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஓமிக்ரான் எக்ஸ் வகை கொரோனா பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என்றும் குறைவான நபர்களுக்கே வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் என்.கே. அரோரா குறிப்பிட்டார்.

ஆபத்தானதா

ஆபத்தானதா

ஆபத்தானதா இது தொடர்பாக என்.கே அரோரா மேலும் கூறுகையில், "ஓமிக்ரான் கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. பல புதிய ஓமிக்ரான் வகைகள் உருவாகி வருகிறது. வரும் காலத்திலும் ஓமிக்ரான் தொடர்ந்து உருமாறும். ஆனால், இதற்காக நாம் அச்சப்படத் தேவையில்லை. அதேபோல இந்தியாவில் உள்ள தரவுகளை வைத்துப் பார்க்கும் போது இந்த ஓமிக்ரான் XE மிக வேகமாகப் பரவுவதை நிரூபிக்க எந்தவொரு ஆதாரமும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

 புதுப்புது வகை

புதுப்புது வகை

முன்னதாக, மும்பையில் ஒருவருக்கு இந்த ஓமிக்ரான் XE வகை கண்டறியப்பட்டது. 2 டோஸ் வேக்சின் போட்டுள்ள 67 வயதான முதியவர் ஒருவருக்கு ஓமிக்ரான் XE உறுதி செய்யப்பட்டது. அதேபோல குஜராத் மாநிலத்திலும் ஒருவருக்கு இந்த ஓமிக்ரான் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே ஓமிக்ரான் எக்ஸ்எம் (XM) வகையும் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கண்டறியப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+