மதமாற்ற புகார்.. 3 முஸ்லீம்கள் மீது பாய்ந்தது NSA.. வீடுகளை இடிக்கவும் ம.பி முதல்வர் உத்தரவு!
டெல்லி: மத்திய பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவரை மூன்று இஸ்லாமிய நபர்கள் அடித்து சித்ரவதை செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதில் தொடர்புடைய மூன்று பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவியது. இந்த வீடியோவில் இளைஞர் ஒருவரை பிடித்து வைத்து மூன்று நபர்கள் கடுமையாக தாக்குதவதும், நாயை போன்று குரைக்க வேண்டும் எனக் கூறி சித்ரவதை செய்யும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன இந்த வீடியோ மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து இது தொடர்பாக மத்திய பிரதேச உள்துறை மந்திரி விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மத்திய பிரதேச மத சுதந்திர சட்டம், கடத்தல் வழக்கு, வேண்டும் என்றே காயப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் தனது பெயர் விஜய் ராமச்சந்தினி என்றும், தன்னை கட்டி வைத்து சித்ரவதை செய்த மூன்று பேரும் இஸ்லாம் மதத்திற்கு மாற வற்புறுத்தியதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதாவது, மூன்று இஸ்லாமிய நபர்களும் தன்னை மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என்றும் முஸ்லீம் மதத்திற்கு மாற வேண்டும் எனக்கூறியும் கடுமையாக தாக்கியதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து இந்தபுகாரின் அடிப்படையில், சமீர், சஜித், பைசன் லால் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அவர்களின் வீடுகளை இடிக்கவும் உத்தரவிட்டார். அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது. இந்த சட்டத்தின் படி, 12 மாதங்கள் வரை எந்த விசாரணையும் இன்றி அவர்களை சிறையில் வைத்து இருக்க முடியும். தேவைப்பட்டால் நீட்டிக்கவும் முடியும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications