கைவிட்டாங்க! பாஜகவில் புலம்பும் "தலைகள்".. நுபுர் சர்மாவால் கட்சிக்குள்ளேயே விவாதம்? நடந்தது என்ன?
டெல்லி: நுபுர் சர்மாவை பாஜகவில் இருந்து நீக்கிய நிலையில், பாஜக கட்சிக்கு உள்ளும், கட்சிக்கு வெளியிலும் இது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த பிரச்சனையை பாஜக கையாண்ட விதம் சில மூத்த தலைகளை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறதாம்.
Recommended Video
இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகம் பற்றி பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தெரிவித்த கருத்து கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இவரின் கருத்து சர்வதேச அளவில் எதிர்ப்புகளை சந்தித்தது. பல நாடுகள் நுபுர் சர்மா கருத்தை விமர்சனம் செய்தது.
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் நுபுர் சர்மா நபிகள் நாயகத்தை கடுமையாக விமர்சனம் செய்து இகழ்ந்து பேசினார். இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். கத்தார் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளுக்கு இந்தியா இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.

நுபுர் சர்மா
இந்த நிலையில் நுபுர் சர்மாவை பதவியில் இருந்து நீக்கியதையும், கட்சியில் இருந்து நீக்கியதையும் கட்சியில் இருக்கும் சிலர் விரும்பவில்லை என்று தி இந்தி ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது இந்த விவகாரத்தை இன்னும் சிறப்பாக கையாண்டு இருக்கலாம் என்று கட்சிக்குள் இருக்கும் சிலர் கருதுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று முதல்நாள் நுபுர் சர்மா நீக்கப்பட்டதும், #ShameOnBJP என்ற டேக் டிரெண்டானது.

டேக் டிரெண்ட்
இந்த டேக்கை பாஜக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பலர்தான் டிரெண்ட் செய்தனர். கட்சி நுபுர் சர்மாவை கைவிட்டுவிட்டதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டு இருந்தனர். குறிப்பாக நுபுர் சர்மாவிற்கு பலர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நிலையில், அவரை பாஜக கைவிட்டுவிட்டதாக பாஜக ஆதரவாளர்கள் இணையத்தில் விமர்சனம் வைத்து வந்தனர். முக்கியமாக கட்சியின் செய்தி தொடர்பாளரை fringe.. அதாவது கலகம் செய்பவர் என்று கட்சியே கூறியதை நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லையாம்.

யாரை ஆதரிப்பது
எங்களுக்கு கட்சியை ஆதரிப்பதா அல்லது கட்சிக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் நுபுர் சர்மா போன்றவரை ஆதரிப்பதா என்று தெரியவில்லை என்று கட்சியை தீவிரமாக ஆதரிக்கும் இந்து வலதுசாரிகள் விமர்சனங்களை வைத்துள்ளனர். பொதுவாக பாஜகவின் அனைத்து முடிவுகளையும் ஆதரிக்கும் இவர்கள் முதல் முறை கட்சி முடிவை எதிர்த்து பேசி உள்ளனர். இதுதான் பாஜக கட்சிக்கு உள்ளும், கட்சிக்கு வெளியிலும் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆதர்வாவு இல்லை
அதோடு பாஜகவில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியவர்கள் பலருக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசிய கபில் மிஸ்ரா போன்றவர்களுக்கு கட்சியில் உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதை எல்லாம் பார்த்துதான் கட்சி தங்களை காக்கும் என்று நுபுர் சர்மா போன்றவர்கள் பேசுகிறார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்களை பாஜக கழற்றிவிட்டது எப்படி சரியானதாக இருக்கும். இதனால் மற்றவர்கள் தங்கள் கருத்தை பேச அஞ்சுவார்கள். கட்சி அவர்களுடன் இருந்திருக்க வேண்டும் என்று நிர்வாகிகள் கருதுகிறார்களாம்.

சர்வதேச விமர்சனம்
இது தொடர்பாக தி இந்து ஊடகத்திற்கு பாஜக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து கருத்தில், இந்த முடிவு சர்வதேச விமர்சனங்களுக்கு பின்பே எடுக்கப்பட்டது. அவர் அந்த கருத்தை தெரிவித்து 9 நாட்களுக்கு பின்பே முடிவு எடுக்கப்பட்டது. இது சர்வதேச அளவில் பிரச்சனை ஆகவில்லை என்றால் கட்சி அவர் மீது நடவடிக்கை எடுத்து இருக்காது என்று தெரிவித்துள்ளார். அதாவது கட்சி நிர்வாகிகளை பாஜக கைவிடாது, இக்கட்டான சூழ்நிலை, வேறு வழியில்லை என்பதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாஜக உயர்மட்ட அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications