கடந்த 10 ஆண்டு காலத்தில்.. கோடீஸ்வரர்கள் பட்டியலில் சரிந்த OBC.. அதி உயர்வைக் கண்ட உயர் ஜாதிகள்!
டெல்லி: மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்ற 10 ஆண்டுகாலத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி- OBC) பொருளாதார வளத்தில் பெரும் சரிவை சந்தித்துள்ளனர்; அதே நேரத்தில் முற்படுத்தப்பட்ட வகுப்பினர் (FC) பெரும் உயர்வை சந்தித்துள்ளனர் என புள்ளி விவரங்களை மேற்கோள்காட்டி பிசினஸ் ஸ்டாண்டர்ட் ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு புள்ளி விவரங்களின் அடிப்படையில் பிசினஸ் ஸ்டாண்டர் ஏடு வெளியிட்டுள்ள தகவலில், ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோரின் பொருளாதார வளம் கடந்த 10 ஆண்டுகளில் பெரும் சரிவை சந்தித்து வருகிறது என்கிறது அந்த தகவல்.

2013-ம் ஆண்டு நாட்டின் கோடீஸ்வரர்களில் 17.8% ஓபிசி ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். உயர் ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் 80.4%. 2014-ல் பாஜக ஆட்சியில் அமர்ந்த காலத்தில் கோடீஸ்வரர்களில் ஓபிசி- 20%; உயர் ஜாதியினர் 78.1%. ஆனால் 2015-ல் 17.6%; 2016-ல் 16.8%, 2017-ல் 16.1% என படிப்படியாக குறைந்து 2022-ல் வெறும் 9% ஓபிசியினர்தான் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். ஆனால் 2022-ல் கோட்டீஸ்வரர்களில் உயர்ஜாதியினர் 88.4% என அதிகரித்துள்ளனர்.
2022-ம் ஆண்டில் நாட்டின் கோடீஸ்வரர்களில் தலித்துகள் 2.6% மட்டும்தான். பழங்குடிகளில் 1% கூட இந்த கோடீஸ்வரர்கள் பட்டியலில் இல்லை. இத்தனைக்கும் நாட்டின் தொழிலாளர்களில் 19.3% பேர் தலித்துகள்; நாட்டின் தொழில் நிறுவனங்களில் 11.4% தலித்துகளுக்குச் சொந்தமானது. நாட்டின் தொழிலாளர் வளத்தில் 10.1% பழங்குடிகள். ஆனால் 5.4% அளவுக்குதான் பழங்குடிகளிடம் தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன.
பத்து ஆண்டுகால பாசிச பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்ட - OBC வகுப்பினரின் பொருளாதார வளர்ச்சி 11% குறைந்துள்ளது. குறிப்பாக நாயக்கர், வன்னியர், கொங்கு வேளாளர், கவுண்டர், கள்ளர், அகமுடையார், மறவர், நாடார் உள்ளிட்ட சமூகத்தினரின் பொருளாதார வளர்ச்சி பாஜக ஆட்சியில்… pic.twitter.com/nJyt1ZLZSk
— DMK IT WING (@DMKITwing) June 18, 2024
இந்த புள்ளி விவரங்களை அடிப்படையாக திமுகவின் ஐடி விங் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், பத்து ஆண்டுகால பாஜக ஆட்சியில் உயர் வகுப்பினர் 10% அளவுக்கு கோடீஸ்வரர்களாக உயர்ந்துள்ளனர். ஆனால் நாயக்கர், வன்னியர், கொங்கு வேளாளர் கவுண்டர், கள்ளர், அகமுடையார், மறவர், நாடாரை உள்ளடக்கிய ஓபிசியில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 11% சரிவை சந்தித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்










Click it and Unblock the Notifications