மணமகன் வீட்டார் முன்பு.. ஊரே திரண்டிருக்க.. தரமான சம்பவம் செய்த மணமகள் ஞாபகம் இருக்கா?.. அவரு...!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாப்பிள்ளை பக்கத்தில் இருக்கும் போது மணப்பெண் செய்த காரியம் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. இந்த வாழ்க்கையை நிஜமாகவே சொர்க்கம் ஆக்கிக் கொள்வதும் நரமாக்கிக் கொள்வதும் வாழ்வோர் கையில் இருக்கிறது.

மனைவியையோ கணவனையோ விவாகரத்து செய்து அடுத்தடுத்த திருமணம் செய்வோரை விடுங்கள். ஆனால் பொதுவாக ஆணுக்கும் பெண்ணுக்கும் வாழ்வில் ஒரு முறை மட்டுமே வரும் வைபவம்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

கல்யாண வீடு என்றாலே ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டம், கலர் கலராக துணிமணிகள் என கொண்டாட்டமாக இருக்கும். இதில் முக்கிய இடம் பிடிப்பது புகைப்படம் எடுப்பதுதான். அழகு அழகாக ஆடைகளை அணிந்து கொண்டு நீ நான் என போட்டோஷூட் நடத்தும் சம்பவமும் நடக்கும்.

வேறு ஜோடிக்கு நிச்சயம்

வேறு ஜோடிக்கு நிச்சயம்

ஒரு திருமணத்தில் வேறு ஒரு ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்படும் சம்பவமும் நடைபெறும். இதனால் அத்தை மகள்கள், மாமா மகள்களை கரெக்ட் செய்ய விதவிதமான ஆடைகளை அணிந்து கொண்டு ஸ்டைலாக கெத்தாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பர். மணமக்களை விட கூட இருப்பவர்கள்தான் அதிக போட்டோஷூட் நடத்திக் கொள்வர்.

ஊரே கூடு

ஊரே கூடு

இந்த நிலையில் திருமணத்திற்கு ஊரே கூடி இருக்க மணமகள் செய்த காரியம் மீண்டும் மீண்டும் வைரலாகி வருகிறது. திருமண பெண் மணமேடையில் தூங்கி வழிந்து கொண்டிருக்கும் வீடியோதான் அது. இது கடந்த ஜனவரி மாதமே வைரலானது. ஆனால் தற்போது மீண்டும் மீண்டும் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

வடமாநிலத்தவர் வீட்டு திருமணம்

வடமாநிலத்தவர் வீட்டு திருமணம்

ஒரு வடமாநிலத்தவரின் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு பண நோட்டு மாலை அணிவிக்கப்பட்டு எழுந்து நின்று சடங்கிற்காகவும் புகைப்படத்திற்காகவும் போஸ் கொடுத்து கொண்டிருந்தார். ஆனால் மணமகளோ சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு தலை முதல் கால் வரை அணிகலன்களை அணிந்து கொண்டு மேக்கப் போட்டு கொண்டு தூங்கி தூங்கி வழிந்து கொண்டிருந்தார்.

என்ன வேணாலும் நடக்கட்டும்

என்ன வேணாலும் நடக்கட்டும்

என்ன நடந்தாலும் தூக்கத்தை விடக் கூடாது என்பதில் அந்த பெண் குறியாகவே இருந்தார். சொந்தக்காரர்கள் பார்ப்பார்களே, குறைந்தபட்சம் மாப்பிள்ளை வீட்டார் பார்ப்பார்கள் என எந்த கவலையும் இன்றி கல்யாணமாவது ஒன்னாவது நாம் தூங்க வேண்டும் என்பது நன்றாக தெரிந்தது. அந்த பெண் தூங்கி வழிந்ததை ஜூம் செய்தும் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ காட்டு தீயாய் பரவிய நிலையில் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+