நான் பெரிய "டான்".. சுஷாந்த் சிங்கை நான்தான் கட்டுப்படுத்துகிறேன்.. ரியாவின் பகீர்வீடியோ.. டிவிஸ்ட்!
டெல்லி: நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பின் அவரின் காதலில் ரியா சக்ரபோர்த்திக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதா என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் தூக்குமாட்டி இவர் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இவரின் மரணத்திற்கு என்ன காரணம் என்று இன்னும் தெரியவில்லை.
இந்த மரணத்தில் பிரபல நடிகர்கள் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் விசாரித்து வந்தனர்.இந்த நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு அவரின் காதலி ரியா சக்ரபோர்த்தி காரணமாக இருப்பாரோ என்றும் விசாரிக்கப்பட்டுள்ளது.

பண மோசடி
சுஷாந்த் சிங்கை ரியா ஏமாற்றிவிட்டார். பண ரீதியாக ரியா சுஷாந்த் சிங்கை ஏமாற்றி விட்டார், சுஷாந்த் சிங்கை மனரீதியாக ரியா கொடுமைப்படுத்தினார் என்று சுஷாந்த் சிங் தந்தை கேகே சிங் புகார் வைத்துள்ளார். சுஷாந்த் சிங் கணக்கில் இருந்து 15 லட்சம் ரூபாய் மாயமாகிவிட்டது என்றும் புகார் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பீகார் போலீஸ், மும்பை போலீஸ் , அமலாக்கத்துறை இது தொடர்பாக விசாரித்து வருகிறது.

வீடியோ
இந்த நிலையில், ரியா சக்ரபோர்த்தி வெளியிட்ட பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ரியா சக்ரபோர்த்தி பேசும் விஷயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் கருப்பு உடையில் பேசும் ரியா, எனது காதலன் சுஷாந்த்தை நான்தான் கட்டுப்படுத்துகிறேன். அவனை நான் மட்டுமே கட்டுப்படுத்துகிறேன்.

நான்தான் டான்
சுஷாந்த் சிங் தன்னை பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார் . ஆனால் அவர் பெரிய ஆள் இல்லை. நான்தான் இங்கே பெரிய ஆள். நான்தான் இங்கே டான். நான்தான் அவனை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். நான்தான் பெரிய டான். என் பாய் பிராண்டுக்கு என்னை பற்றி தெரியாது. என்னுடைய குழுவே வேறு. நான் சிறிய குழுவை சேர்ந்தவள் கிடையாது.

தயாரிப்பாளர்கள்
எல்லா தயாரிப்பாளர்களுக்கும் எனக்காக வேலை பார்க்கிறார்கள். அவர்கள் நான் சொல்வதைதான் கேட்க போகிறார்கள். எல்லோரும் எனக்கு கீழ்தான் இருக்க போகிறார்கள், என்று ரியா சக்ரபோர்த்தி குறிப்பிட்டு இருக்கிறார். அவர் எதை நினைத்து இப்படி சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் இப்போது அந்த வீடியோ ரியாவிற்கு எதிராக திரும்பி உள்ளது.

கைது செய்யுங்கள்
தற்போது வரிசையாக இணையத்தில் பலர் ரியாவை கைது செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். ரியா பேசுவது உண்மைதான். அவரே தனது கேரக்டரை ஒப்புக்கொண்டார் . அவரை கைது செய்து முறையாக விசாரிக்க வேண்டும், என்று இணையத்தில் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications